அரசு கலைக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டுமா ? வெளியானது அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சமீபத்தில், +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் செயல்பட்டுவரும் 176 அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. https://www.tngasa.in என்ற இணையதளம் வழியாக, எதிர்வரும் மே-27 ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையமும் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தந்த மொழிப் பாடங்களின் இளங்கலை பாடப்பிரிவுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தரவரிசையின் அடிப்படையில், அவர்கள் விரும்பும்  பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.டபிள்யு உள்ளிட்ட படிப்புகளின் சோ்க்கைக்கு பயன்படுத்தப்படும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். விண்ணப்பக்கட்டணம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கும் ரூ.2 என்றும் மற்ற பிரிவினர்களுக்கு ரூ50 என்பதாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

கல்லூரி மாணவா் சோ்க்கைதிருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில், லால்குடி, மணப்பாறை, முசிறி, ஸ்ரீரங்கம், துவாக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்டு 6 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பெற முடியும்.

ந்தை பெரியார்  அரசு கல்லூரியில் 17 இளநிலை பாடப் பிரிவுகளில் 2 shift-லும் 1420 இடங்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் மாலை நேர வகுப்புகளில் 3 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு, 120 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதேபோல,  மணப்பாறை அரசு கல்லலூரியில் பி.சி.ஏ., பி.காம்., சி.ஏ.; முசிறி  அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., தமிழ், பி.காம்., மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகள் மாலை நேர வகுப்புகளாக புதியதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இவை குறித்த விரிவான தகவல்களுக்கு https://www.tngasa.in என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம்.

 

—              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.