தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சீமான் இளையராஜா நூல்கள் ஆய்வு !
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சீமான் இளையராஜா நூல்கள் ஆய்வு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள மொழிப்புல அவையத்தில் நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா அவர்கள் எழுதிய “சாதீ – பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை” “பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்” என்ற இரு நூல்களின் நூலாய்வுக் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சி.தியாகராஜன் பதிவாளர்(பொ), பேராசிரியர் ச.கவிதா மொழிப்புலத் தலைவர் முன்னிலை வகித்தனர். இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ.தேவி வரவேற்புரை நல்க கலைப்புலத் தலைவர் பேராசியர் பெ. இளையாப்பிள்ளை வளர்தமிழ் புலத்தலைவர் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன், நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் இரா.காமராசு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நூலாய்வு குறித்து சென்னை இலயோலா கல்லூரி பேராசியர் இரா. காளீஸ்வரன் சாதீ- பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எனும் நூல் குறித்து பேசும் போது இராமகிருஷ்ணன் அம்பேத்கரின் மறைக்கப்பட்ட வரலாறுகளை குறிப்பிடுகின்றார் என்றும் ஆசிரியரின் கணக்கை சரி செய்தவர் தான் அம்பேத்கர். அந்த வரிசையில் ஆசிரியரின் தவறுகளைச் சரிசெய் ஒடுக்கப்பட்டவர்களின் தாழ்த்தபட்டவர்களின் குரலாக இன்றும் சீமான் இளையராஜா செயல்படுகிறார் என்றும் இன்றைய சமூக சுழலுக்கு மிகவும் அவசியம் என்றும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் உலக அளவில் பேசப்படும் என்று கருத்துரை வழங்கினார்.
வரலாற்று ஆய்வாளர் கே. கங்காதரன் பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதரின் இலக்கிய பணிகள் எனும் நூலினை மிக நேர்த்தியான முறையில் மறைக்கப்பட்ட ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதரின் சிறப்புகளை மேன்மையாக எடுத்துரைத்து, எளிய நடையில் மிக கனமான செய்திகளுடன் புத்தகம் சிறப்புடன் உள்ளது எனப் பாராட்டி மேன்மேலும் வளர பேரன்புடன் வாழ்த்தினார்கள்.
நிகழ்வின் முடிவில் நூலாசிரியர் முனைவர் சீமான் இளையராஜா அவர்கள் அயோத்தி தாசரைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே எழுச்சிதமிழர் அறிவர் தொல். திருமாவளவன் அவர்களின் மேடைப் பேச்சக்களே தூண்டுகோலாய் அமைந்தது என்று சாதீ- பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நூல் எழுதுவதற்கு அவரது பேச்சும் எழுத்தும் தான் காரணம் என்று கூறி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவினை மொழியியல் துறை உதவிப்பேராசிரியர் மா. இரமேஷ்குமார் தொகுத்து வழங்கினார். விழாவில் தஞ்சை சுற்றுவட்டார பிற கல்லூரி பேராசிரியர்களும், கல்வியியல் ஆர்வலர்களும் பவுத்த சிந்தனையாளர்களும் திரளான மாணவர்களும் பங்கு பெற்றனர்.
– சிறப்பு செய்தியாளர்