டைரக்சனில் இறங்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள்
டைரக்சனில் இறங்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள்
தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் சிலர் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் சினிமாக்களில் தங்களது திறமையைக் காண்பித்து முன்னணி ஹீரோக்களுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்டண்ட் மாஸ்டர்களாக கோலோச்சி வருகின்றனர்.
இதில் ஸ்டண்ட் சில்வா பெங்காலி, மராட்டி, சிங்கள மொழி சினிமாக்களிலும் கொடி கட்டிப் பறப்பவர். இந்த பொங்கலுக்கு ரிலீசான ‘மிஷன் சாப்டர்-1’ படத்தில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஹீரோ அருண் விஜய் மோதும் சண்டைக் காட்சியை மிக பிரம்மாண்டமாகவும் மெய் சிலிர்க்கும் வகையிலும் கம்போஸ் பண்ணியிருந்தார் சில்வா.

அதிரடி ஆக்ஷனில் அதகளம் பண்ணும் சில்வாவின் தோற்றம் தான் கரடுமுரடாக இருக்குமே தவிர, பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அந்த மனசு தான் அனைவரின் மனசையும் இளகச் செய்த, 2022-ல் ரிலீசான ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படம் மூலம் டைரக்டராக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த 2024-ல் இரண்டாவது படத்தை டைரக்ட் பண்ணும் ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார் ஸ்டண்ட் சில்வா.
இவரைப் போலவே இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருப்பவர்கள் அன்பறிவு என்ற இரட்டையர்கள். கமல்&-லோகேஷ் கனகராஜ் காம்போவில் ரிலீசான ‘விக்ரம்’ படத்தில் இரட்டையர்களின் அசாத்திய திறமை எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இவர்களின் நேர்த்தியான உழைப்பு, கமலுக்கு ரொம்பவே பிடித்துப் போனதால், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் அன்பறிவ்வை டைரக்டராக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார் கமல்ஹாசன்.
-மதுரை மாறன்