“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !
‘சார்’ சக்சஸ்! தியேட்டரில் கொண்டாட்டம்!
எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் பேனரில் சிராஜ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில், கடந்த வாரம் வெளியான ‘சார்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை காட்சிகளும்அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ந்த இயக்குநர் போஸ் வெங்கட், நடிகர் விமல், மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் உட்பட குழுவினர் திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஶ்ரீ சக்தி சினிமாஸ் உரிமையாளர் கார்த்திக் சுப்பிரமணியம் பேசும் போது “லப்பர் பந்து படத்திற்குப் பிறகு, சார் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடுவதால் படத்திற்கான காட்சிகளை அதிகரித்துள்ளோம். இப் படத்தை தந்த இயக்குநர் போஸ் வெங்கட், நடிகர் விமல் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. இது போல் தொடர்ந்து நல்ல படங்களை தர வேண்டுமென அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி” என்றார்.
இயக்குநர் போஸ் வெங்கட் பேசும் போது
“தற்போதைய காலகட்டத்தில், பெரிய படங்களைத் தாண்டி சிறிய நல்ல படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தருவது பெரிய மகிழ்ச்சி தருகிறது. வார நாட்களை தாண்டி, படத்தை எடுத்துவிடாமல், இப்போது எங்கள் படத்திற்கு காட்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை நேரில் கண்டது இன்னும் மகிழ்ச்சி. இந்த வரவேற்பு, இது போல் நல்ல படத்தை தர வேண்டும் எனும் ஊக்கத்தை தந்துள்ளது” என்றார்.

நடிகர் விமல் பேசும் போது “ரசிகர்கள் தந்து வரும் ஆதரவு, என்னை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. இப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. தொடர்ந்து இதே போல் ரசிகர்கள் ரசிக்கும் படைப்புகளில் நடிப்பேன். அனைவருக்கும் நன்றி”
— மதுரை மாறன்.







