அங்குசம் பார்வையில் ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாரிப்பு : ‘அபிராமி மீடியா ஒர்கஸ்’ அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், வெளியீடு : ஜி5 ஒரிஜினல் [ ஓடிடி ]. டைர்கஷன் : நாகா, நடிகர்-நடிகைகள் : தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், ஒய்.ஜி.மகேந்திரா, க்ரிஷா குரூப், ராம்ஜி,  விவேக் ராஜகோபால், சண்முகராஜன், தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன். ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாசன் தேவராஜன், இசை : ரேவா, எடிட்டிங் : ரெஜீஸ் எம்., ஆர்ட் டைரக்டர் : ஜி.ராஜ்குமார், காஸ்ட்யூம் டிசைனர் : நிவேதா ஜோசப், பாரதிதாசன், இணை இயக்குனர் : ராஜேஷ் சூசைராஜ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : சரவணக்குமார். பி.ஆர்.ஓ. சதீஷ் [ எய்ம் ].

ஐந்தாம் வேதம்வாரணாசியில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே தனது தாயின் அஸ்தியைக் கரைத்து, காரியங்களைச் செய்கிறார் தன்ஷிகா. அதை முடித்துவிட்டு, புதுச்சேரி போய், அங்கிருந்து தனது பாய்ஃபிரண்டுடன் திருவனந்தபுரம் செல்வது தான் அவரது திட்டம். காரியங்களை முடித்துவிட்டு, ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பின், அங்கே ஒரு வெள்ளை வேட்டி சாமியார் போல் இருக்கும் நபர் ஒருவர், தன்ஷிகாவிடம் ஒரு சின்ன மரப்பெட்டியைக் கொடுத்து, இதை தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஐயங்கார்புரம் கோவில் ஐயரிடம் கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்.

தீபாவளி வாழ்த்துகள்

“நான் ஏன்யா ஐயங்கார்புரம் போகணும், எனக்கு ஆயிரம் சோலி கிடக்குய்யா..” என தடாலடியாக மறுக்கிறார். ‘இதை அங்கே கொடுக்காமல் உன்னால் வேறு இடங்களுக்குப் போக முடியாது” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கழுத்தறுபட்டுச் சாகிறார் அந்த சாமியார்.

ஐந்தாம் வேதம்தன்ஷிகாவிடம் அந்த சாமியார் கொடுத்த மரப்பெட்டியில் என்ன இருக்கு? அதை ஐயங்கார்புரத்திற்கு தன்ஷிகா கொண்டு போனாரா? இல்லையா? என்பதை புராணக் கதையுடன், சாஸ்திரம், ஜோதிடம், இவற்றுடன் திகிலையும் அமானுஷ்யத்தையும்  மிக்ஸ் பண்ணி, அதில் ஏ.ஐ.டெக்னாலஜியையும் கலக்கி எடுத்து எட்டு எபிசோடுகளையும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் கொண்டு செல்கிறார் டைரக்டர் நாகா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அக்டோபர் 25முதல் ஜி5 ஒரிஜினல் ஓடிடி பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது இந்த ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ். எட்டு எபிசோடுகளையும் [ ஒரு எபிசோட் அரை மணி நேரம் ] தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் பார்த்தால் கூட சலிப்போ, அயற்சியோ இல்லாமல் பார்க்கும் அளவுக்கு சுவாரஸ்யமாகவும் திடுக்கிடும் திருப்பங்களுடனும் வெப் சீரிஸைக் கொண்டு போயிருப்பதில் இயக்குனர் நாகாவின் திரைக்கதை திறமை பளிச்சிடுகிறது. அதே போல் இந்த சீரிஸில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் க்ளைமாக்ஸில் ஐயங்கார்புரத்தில் கொண்டு வந்து இணைத்திருப்பது நாகாவின் புத்திசாலித்தனத்திற்கு சாட்சி.

ஐந்தாம் வேதம்எட்டு எபிசோடுகளிலும் நீக்கமற நிறைந்து [ ஒரு சில காட்சிகள் தவிர ] அல்ட்ரா மார்டன் பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கார் தன்ஷிகா. வெல்டன், கங்கிராஜுலேஷன்ஸ் தன்ஷிமா.. அதே போல் கார் டிரைவர், ஐயங்கார்புரம் கிராமத் தலைவர், ஆஸ்திரேலியா ரிட்டர்னான இவரது தம்பி உட்பட  எல்லா கேரக்டர்களுக்கும் அவர்களுக்குரிய பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளார் இயக்குனர் நாகா. மூடநம்பிக்கையைக் கூட ஏ.ஐ.டெக்னாலஜி உதவியுடன் நம்ப வைத்துள்ளார் நாகா. ஆஸ்திரேலியப் பெண்ணுக்கும் தேவதர்ஷினிக்கும் சில நிமிட லெஸ்பியன் சீன்  திகிலுக்கிடையே கிளுகிளு, குளுகுளு.

ஐந்தாம் வேதம்வாரணாசியில் தொடங்கி, பல ஊர்களுக்குப் பயணித்து ஐயங்கார்புரம் வரை அபாரமாக உழைத்திருக்கிறார் கேமராமேன் ஸ்ரீனிவாசன் தேவராஜ். இளம் பெண் இசையமைப்பாளர் ரேவா, பின்னணி இசையில் திகில் கூட்டியிருக்கிறார். எட்டு எபிசோடுகளையும் தொடர்ச்சியாக பார்ப்பதற்கு பெரிதும் மெனக்கெட்டிருப்பவர் எடிட்டர் ரெஜீஸ். அந்த சின்ன மரப்பெட்டி, ஐயங்கார்புரத்து கோவிலுக்குள் மர்மக் குகை, ஐந்து தலை பிரம்மன் சிலை உட்பட பல காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் ராஜ்குமாரின் கைவண்ணம் மிளிர்கிறது. மொத்தத்தில் இந்த ‘ஐந்தாம் வேதம்’ அனைவருக்கும் பிடிக்கும்.

 

— மதுரை மாறன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.