இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் திடீர் மரணம்
இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் திடீர் மரணம்
இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.தனராஜ்(52), மாரடைப்பால் இன்று காலமானார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி- லட்சுமி தம்பதியரின் மூத்த மகன் எஸ்.தனராஜ். தினமணி நாளிதழின் முசிறி பகுதி நேர செய்தியாளராக பணியைத் தொடங்கிய இவர், தினபூமி நாளிதழின் திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியராக 5 ஆண்டுகளாக பணியாற்றினார். பின்னர், தினமணி, தினகரன் நாளிதழ்களில் திருச்சி பதிப்பின் செய்திப் பிரிவிலும் பணியாற்றினார்.
தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு இந்து தமிழ் திசை நாளிதழ் தொடங்கியது முதல் திருச்சி பதிப்பின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணா என்ற பிளஸ் 1 படிக்கும் மகனும் உள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (டிச.4) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்புக்கு 7401329429, 8248125042.