ரஜினி தலைமையில் அணி திரளும் திமுக, அதிமுக பிரபலங்கள் !
ரஜினி தலைமையில் அணி திரளும் திமுக, அதிமுக பிரபலங்கள் !
ரஜினியின் மீது ஆண்டாண்டு காலமாக வைக்கக் கூடிய மிகப்பெரிய வாதம், ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி தன்னுடைய படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் என்ற குற்றச்சாட்டு. இந்த நிலையில் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமைகளாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கான அடுத்த கட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். 2017 டிசம்பர் 31 கட்சி தொடங்கவேன் என்று ரஜினி அறிவிக்கிறார். அதன் பிறகு ரஜினி மன்றங்கள் மாநிலம் முழுவதும் பல மாற்றங்களை கண்டது. பரிணாம வளர்ச்சியும் அடைந்தது.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை, ரஜினியின் அரசியல் களத்தில் தீவிர செயல்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கு என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும், முக்கிய பிரபலங்களை எல்லாம் தன்னோடு அரசியலில் இணைத்துக்கொண்டு, வலுவான கட்டமைப்போடு அரசியல் களத்தில் இறங்குவது என்று திட்டமிட்டிருக்கிறார்.
தற்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கான இறுதிகட்ட பணியையும் தொடங்கிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமித்திருக்கிறார். அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுசார் பிரிவில் மாநிலத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 31 ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிக்க உள்ளார்.
கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.ரசிகர்கள் கொண்டாட்டம் இப்படி இருக்க வேட்பாளராக நிறுத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை தேடி வருவதாகவும், அந்தப் பணியை சைதை துரைசாமி மேற்கொண்டு வருகிறாராம். சைதை துரைசாமி அதிமுகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது திமுக தலைவராக இருந்த கலைஞரின் மகன் மு.க அழகிரியும் ரஜினியுடன் இணைந்து தேர்தலில் பயணிப்பார் என்று மன்ற நிர்வாகிகள் கூறுகின்றனர்.முக அழகிரி ரஜினியின் (3/12/2020) இன்றைய அறிவிப்புக்கு தற்போது வாழ்த்து கூறியுள்ளார்.மேலும் முக அழகிரி பிஜேபிக்கு செல்வார் என்று இருந்த நிலையில் தற்போது ரஜினி மன்றதோடு கைக் கோர்க்க உள்ளார்.
மேலும் டெல்லியை தொடர்பு கொண்டு தேர்தல் சின்னமாக தன்னுடைய பிரதான சின்னமான பாபா முத்திரையை உறுதி செய்திருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். ஜனவரி மாதத்தில் தேர்தல் ஆணையம் பாபா முத்திரையை உறுதி செய்து அறிவிப்பை வெளியிடும் என்று கூறுகின்றனர்.
-மெய்யறிவன்