மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் திடீர் தீ – விலகாத மர்மம் ?

உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.  இதனால் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் திடீர் தீ முக்கிய கோப்புகள் ஆவணங்கள் எரிந்தது ?

டெல்லி, வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 7 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

Srirangam MLA palaniyandi birthday

இது குறித்து டெல்லி தீயணைப்பு சேவை பிரிவு அலுவலர்கள் கூறுகையில், “இன்று காலை 9.20 மணிக்கு உள்துறை அமைச்சகத்தின் ஐ.சி.பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, 9.35 மணிக்குள்ளாகவே தீயை கட்டுப்படுத்தி அணைத்துவிட்டனர்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இருப்பினும் அங்குள்ள ஜெராக்ஸ் இயந்திரம், சில கணினிகள் மற்றும் சில ஆவணங்கள் தீயில் எரிந்து விட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது, உள் துறை அமைச்சர் அமித்ஷா அங்கு இல்லை. ஆனால், பல்வேறு அரசு அலுவலர்கள் அப்போது அங்கு இருந்தனர்” என்றனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.  இதனால் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.எம்.ஜி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.