மோடியின் கியாரண்டிக்கு 15 ஆயிரம் கோடி வீண் !!
”ப்ரீத்திக்கு நான் கேரண்டி" என்ற ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர் "இது மோடியின் கேரண்டி" என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை.
மோடியின் கியாரண்டிக்கு 15 ஆயிரம் கோடி வீண் !!
மோடி சர்க்கார் கி உத்தரவாதம்’ – பொது நிதியைப் பயன்படுத்தி சுவருக்குச் சுவர் பிரச்சாரம். செய்தித் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து இரண்டு நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சராசரியாக ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் மோடி குறித்த ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகிறது.
1 நிமிடம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ஏறத்தாழ 5 லட்சம் கட்டணம் வாங்குகிறார்கள். மொத்தமாக ஒருநாளைக்கு 300 விளம்பரங்கள் என்றால் 15 கோடி செலவாகிறது.
இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் உட்பட குறைந்தது 50 தனியார் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பாகிறது. இதற்கு 750 கோடி ரூபாய் செலவாகிறது.
ஒருவேளை பல்க் விளம்பரம் என்பதால் சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் குறைந்தது 500 கோடி செலவாகும். தேர்தல் முடியும் வரை குறைந்தது இன்னும் 30 நாட்கள் இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பானாலும் 15 ஆயிரம் கோடி செலவாகிறது.
இந்தத் தொகையை ஏதாவது நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினால் இந்தியாவில் ஏழ்மை ஒழிக்கப்படும். வீடற்ற ஏழை மக்கள் வசிப்பதற்கு ஒரு வீடு கிடைக்கும். கல்வி பெற வாய்ப்பில்லாத குழந்தைகள் கல்வி பெறுவார்கள்.
இதெல்லாம் யாருடைய பணம், மோகன் பகவத்தின் தாத்தா நாட்டுக்கு எழுதி வைத்த பணமா? வாஜ்பாய் கடினமாக உழைத்து பாரதிய ஜனதாவுக்கு எழுதி வைத்த பணமா? மோடி தேநீர் விற்று சம்பாதித்த பணமா?
இந்தியாவின் அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடியாதது மட்டுமில்லை, எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சி அதிகாரத்துக்கு வந்து, இருக்கும் இயற்கை வளங்களையும் நிதி ஆதாரத்தையும் சுருட்டி தங்கள் பெயரில் பத்திரம் போடுகிற பனியாக் கூட்டத்தோடு சேர்ந்து “பாரத் மாத்தாக்கீ ஜே”, “ஜெய் ஷ்ரீராம்” என்று கோஷம் போடுவது வலி மிகுந்ததாகவும், நீதிக்குப் புறம்பானதாகவும் இருக்கிறது.
இந்த அரசியலை தேசத்தின் எளிய உழைக்கும் மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள், அரசியல் விழிப்புணர்வு பெறுவார்கள்? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் நோக்கர்கள்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
”ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்ற ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர் “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை. பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், 10 ஆண்டுகளாக சொன்ன எதையுமே செய்யாமல் சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்க வெட்கமாக இல்லையா?
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என சொன்னாரே? 15 லட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா, 15 ரூபாயாவது கொடுத்தாரா? அது மாதிரியான கேரண்டியா?” என கடுமையாக சாடி உள்ளார்.
கேஎம்ஜி