தர்மபுரி தொகுதியில் டேரா போட்ட ராமதாஸ் குடும்பம் திண்டுக்கல்லை  எட்டி கூட பார்க்கவில்லை !

சௌமியா அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்தார்களோ என்னவோ ... ராமதாஸ் குடும்பமே சௌமியாவுக்காக தர்மபுரியிலே டேரா போட்டு பிரச்சாரத்தில் மூழ்கி விட்டனர்.

0

தர்மபுரி தொகுதியில் டேரா போட்ட ராமதாஸ் குடும்பம் திண்டுக்கல்லை  எட்டி கூட பார்க்கவில்லை !

திண்டுக்கல் தொகுதியில் பாமகவின் மாம்பழச் சின்னம் ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது மற்றும் கணிசமான வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் இந்த முறையும் திண்டுக்கல் தொகுதியை கேட்டுப் பெற்று களமிறங்கியுள்ளது பாமக.

திண்டுக்கல்லில் களமிறங்கும் திலகபாமா: எழுத்தாளரும், கவிஞருமானவர். பாமகவில் மாநில பொருளாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பாமகவின் முக்கியமான பேச்சாளராகவும் இருக்கிறார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, மா.கம்யூ., அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, தேசிய செயலாளர் பிரகாஷ்காரத், திருச்சி சிவா எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், திண்டுக்கல் லியோனி, நடிகர் கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் என நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.

- Advertisement -

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.

.நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கயிலைராஜனை ஆதரித்து செம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

4 bismi svs

ஆனால், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் . திலகபாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியை சேர்ந்த நிறுவன தலைவர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி, முன்னாள் தலைவர் கோ.க.மணி ஆகிய யாரும் இதுவரை தொகுதிப்பக்கமே வரவில்லை. திண்டுக்கல் தொகுதியை பாமக’விற்கு பெற்று வேட்பாளர் அறிவித்தோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என  தங்கள் கட்சி வேட்பாளரையே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா தர்மபுரி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்தார்களோ என்னவோ தினமும் தன் மனைவிக்காக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். அவர் மட்டுமில்லாமல்  அவரது   மகள்களான சங்கமித்ரா,  சஞ்சுத்ரா மற்றும்  மாமனார் ராமதாஸ் என குடும்பமே சௌமியாவுக்காக தர்மபுரியிலே டேரா போட்டு பிரச்சாரத்தில் மூழ்கி விட்டனர்.

தேர்தல் பிரச்சாரம் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பிரச்சாரம் முடிய இன்னும் ஒருநாளே உள்ள நிலையில்கூட, இதுவரை அக்கட்சி தலைவர்கள் திண்டுக்கல்லுக்கு வராதது பாமக வேட்பாளரை மட்டுமல்ல, பாமக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சியான பாஜக நிர்வாகிகளையும் சலிப்படையச் செய்துள்ளது.

பாமக தலைவர்கள் தான் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றால், கரூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறைக்கு  பிரச்சாரத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும்  திண்டுக்கல்  தொகுதி கூட்டணி வேட்பாளரை எட்டி பார்க்காமல் அப்படியே மறந்து போய்விட்டார் போல.

தனித்துவிடப்பட்ட  பாமக வேட்பாளர் திலகபாமா, இதை கண்டு  கலங்காமல், தனது வித்தியாசமான பாணியில்  வடைசுடுவது, மாம்பழம் விற்பது, நாற்று நடுவது, கயிறு திரிப்பது, பறை இசை அடிப்பது என பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார்.

 கேஎம்ஜி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.