ராமஜெயத்தின் நிறைவேறா கனவு … அருண்நேரு கைகளில் !

ராமஜெயத்தின் இடத்தில் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் அரவணைப்பும், அருண்நேருவின் இளம்பாய்ச்சலும் கை கொடுக்கும் என நம்பி ...

0

ராமஜெயத்தின் நிறைவேறா கனவு … அருண்நேரு கைகளில் …

டந்த 2009ம் ஆண்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வரையறைக்கு பின்னர், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு நேரடி அரசியலுக்கு வர வேண்டுமென ஆசைகளுடன் வலம் வந்தார் திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம்.
அதற்கு முத்தாய்ப்பாக துறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அப்போதைய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். இடையில் நடிகர் நெப்போலியன், மு.க.அழகிரி மூலம் காய் நகர்த்தி 2009 தேர்தலில் வேட்பாளராகி வெற்றி பெற்று, பின் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரானார்.

உட்கட்சி காரணங்களால் நெப்போலியன் 2014 – இல் திமுகவில் ஓரங்கட்டப்பட்டவர், பின்னர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இப்போது அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
இடையே, ராமஜெயம் கடந்த 29 மார்ச் 2012-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் காவேரி ஆற்றுப்படுகையில் திருவளர்ச்சோலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரோடு அவரது எம்.பி. கனவும் நிறைவேறாமல் போனது.
அப்போது அரசியலை வேடிக்கை பார்த்த கே.என் நேருவின் மகன் அருண் நேரு, தற்போது வேட்பாளராக பெரம்பலூரில் திமுக சார்பில் களம் காண்கிறார்.

சகோதரர் ரவிசந்திரனுடன்

- Advertisement -

4 bismi svs

27 வருடங்கள் திருச்சி மாவட்ட செயலாளராகவும், ஐந்தாவது முறை அமைச்சராகவும் உள்ள அவரது தந்தை கே.என்.நேருவின் அனுபவமும், ராமஜெயத்தின் இடத்தில் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் அரவணைப்பும், அருண்நேருவின் இளம்பாய்ச்சலும் கை கொடுக்கும் என நம்பி தொகுதியில் உடன்பிறப்புக்கள் ரவுண்ட் அடித்து வருகிறார்கள்.
ஆனாலும், பெரம்பலூர் தொகுதியில் பல திமுக நிர்வாகிகள் கட்சி விசுவாசத்தை தாண்டி, சமுதாய பாசத்தை பச்சமுத்துவுக்காக காட்டி வருகின்றனர். மேலும், நேருவின் தீவிர விசுவாசியான திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சில காரணங்களால் தற்போது அதிருப்தியில் இருப்பதாகவும், லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் கட்சியில் சமீப காலமாக தனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், மண்ணச்சநல்லூர் கதிரவன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கனவில் இருந்ததாகவும், அது கைகூடவில்லை என்பதால் அவரும் அதிருப்தியில் இருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.

இந்நிலையில், ஆ.ராசா நீலகிரியில் மீண்டும் வேட்பாளராக களம் காணும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஊட்டி பக்கம் சென்றுவிட்டதால் சில இடங்களில் திமுக பணிகள் தேக்கமாகி உள்ளன.
பெரம்பலூர் புதிய மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் இந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று தர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

கடைசி நேர “பாய்ச்சல்” மொத்தத்தையும் சரி செய்யும் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள். அதிமுக வேட்பாளராக களம் கண்டுள்ள சந்திரமோகன் தனது முத்தரையர் சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ளிவிட துடிக்கிறார். பாஜக வேட்பாளர் ஐ.ஜே.கே பச்சமுத்து உடையார் சமூக வாக்குகளை குறிவைத்து தொகுதியில் வலம் வந்தாலும், மொத்த மக்களின் மனதை கவர்ந்தவரே வெற்றி வாகை சூடுவார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனது அறிமுக பேச்சால் ஆச்சரியப்பட வைத்த அருண்நேரு, சித்தப்பாவின் தீரா கனவை மிக போராடியே நிறைவேற்றுவார் என்பதே தொகுதியின் பல்ஸ்.

ராகிணி

பெரம்பலூர் தொகுதி புது செண்டிமெண்ட் ..

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, மூன்று முறை பெரம்பலூர் எம்பி ஆகி மத்திய அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஆ.ராசா நீலகிரிக்கு மாறினார். அதன்பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் பெரம்பலூர் தொகுதியில் எம்.பி.யான, நடிகர் நெப்போலியன் இப்போது அரசியலிலேயே இல்லை. அதன்பிறகு எம்.பி.யான மருதராஜ் அரசியலில் ஜொலிக்கவில்லை. கடைசியாக எம்.பி.யாக இருந்த ஐ.ஜே.கே பச்சமுத்து கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு பெரிதாக செய்யவில்லை என்றபோதிலும் அதிருப்தி திமுக நிர்வாகிகளையும், தன் சமூக திமுகவினரையும் விட்டமின் “ப” மூலம் ஜெயித்துவிடலாம் எனும் கனவில் வலம்வருகிறார். அவர் ஜொலிப்பாரா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரியும்.

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.