லண்டனில் ஆ.ராசா… செயலிழந்த ஸ்டார்ங்க் ரூம் சி.சி.டி.வி காமிராக்கள்.. பூதாகரமாகும்  கொங்கு மண்டல தேர்தல்.

0

லண்டனில் ஆ.ராசா… செயலிழந்த ஸ்டார்ங்க் ரூம் சி.சி.டி.வி காமிராக்கள்.. பூதாகரமாகும்  கொங்கு மண்டல தேர்தல். தமிழ்நாடு முழுவதும் எவ்வித பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்று முடிந்த தேர்தல்கள் கொங்கு மண்டலத்தில் மட்டும் தேர்தல் முடிந்தும் தொடர்ந்து பூதாகரமாகி நாளும் ஒரு பரபரப்பை கிளப்புகிறது..

அண்ணாமலை துவங்கிய முதல் பரபரப்பு..

ரோஸ்மில்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை, சென்னையை சேர்ந்த அவரது நண்பரான ஜெயபிரகாஷ், அண்ணாமலையின் மைத்துனர் சிவக்குமார், ஆனந்த், பிரசாந்த் உள்ளிட்டோர் மூலம் வாக்காளர்களுக்கு, ஜி.பே மற்றும் டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்வதாக திமுக கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பத்ரி என்கிற பழனிச்சாமி மற்றும் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த சரவணன் அண்ணாதுறை ஆகியோர் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

- Advertisement -

- Advertisement -

தொடர்ந்து கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆலந்துறை பா.ஜ.க. மண்டல் தலைவர் ஜோதிமணியிடம் ரூ.81,000-ஐ பறக்கும் படை அதிகாரிகள் அப்போது பறிமுதல் செய்தனர். சில தொழிற்சாலைகளில் கோடிகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் அண்ணாமலை வாக்குபதிவு அன்று, தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவதாக பேட்டி தந்தார். இந்நிலையில் தான் தமிழ்நாடு முழுக்க பாஜகவின் மேலிடம் தமிழக தேர்தல் செலவிற்காக தொகுதிக்கு 40 கோடி வீதம் கொடுத்ததாகவும்,

கோடிகளை அமுக்கிய முக்கிய நிர்வாகிகள்

தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலில் பா.ஜ.க, 19 தொகுதிகளில் நேரடியாகவும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட் டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிட்டனர். ஒரு பூத்துக்கு, 30,000 முதல் 50,000 ரூபாய் வரையிலும், மண்டல அளவில் தலா 10 முதல் 15 நிர்வாகிகளுக்கு தலா 20,000 ரூபாய், மாவட்ட அளவில் 20 முதல் 25 நிர்வாகிகளுக்கு தலா 30,000 ரூபாய் வரையும் மேலிடம் வழங்கியது. ஆனால் நிர்வாகிகளோ, பல தொகுதிகளில் நிர்வாகிகள் மேலிடம் வழங்கிய தொகையை முழுதுமாக கட்சியினரிடம் வழங்கவில்லை.

‘தி.மு.க.,வினர் பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்; அதனால் பணத்தை கையில் வைத்திருக்க முடியவில்லை; நீங்கள் தொடர்ந்து தேர்தல் பணி செய்யவும், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் வழங்கப்படும்’ என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அந்த பணத்தை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தான் மேலிடம் வழங்கிய தொகை  கட்சியினரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி பிஜே.பி தேசிய தலைமை கொடுத்த கோடிக்கணக்கான ரூபாயை, தென் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட தொகுதிகளில் பணத்தை பாஜக நிர்வாகிகள் பதுக்கி கொண்டதாக அக்காட்சியின் டெல்லி தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக  செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்

சென்னை துரைப்பாக்கத்தில் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்து மாணிக்கத்திற்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல்

முத்து மாணிக்கம் அளித்த புகாரில் பாஜகவினர் 8 பேர் மீது, 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் கோவை மற்றும் தென்சென்னை உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கொத்து கொத்தாக தேர்தல் ஆணையத்தால் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டை அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்வைத்து வருகிறார்கள்.

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலர் கையில் வாக்களித்ததற்கான அடையாளமான மை வைத்திருந்தது புகைப்படங்களில் அம்பலமானது.

வாக்கு எண்ணிக்கை கூடாது.. திடீர் வழக்கு

4 bismi svs

இந்நிலையில்தான் கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 2019 மற்றும் 2021 தேர்தலில் வாக்களித்தவர்களில் பலரின் பெயர் இம்முறை நீக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

விடுபட்டவர்கள் வாக்களிக்கும் வரை முடிவை நிறுத்தி வைக்கக்கோரியும் கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது வழக்கு தக்கல் செய்துள்ளார்.
அந்த மனு மீது விரைவில் விசாரணை நடக்க உள்ளது.

அந்த 20 நிமிடங்கள்… காமிராக்கள் ஆப்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்,  நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது. நீலகிரியில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் போல் தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என  நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம் சாட்டி வந்தார். தேர்தல் முடிந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுகவிற்கு சாதகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் திமுகவின் சிட்டிங் நாடாளுமன்ற எம் பி எம் வேட்பாளருமான ஆ.ராசா அவரது மகள் மயூரா நேற்று லண்டன் குயின் மேரிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

அதனால் ஆ.ராசா லண்டனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான்,  நீலகிரி தொகுதியில் ஸ்ட்ராங்க் ரூமில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

 ஊட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அதனை அனைத்து கட்சிகளும் பார்த்துக் கொள்ளும் வகையில் 173 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு வந்தன. இந்த கேமராக்கள் இன்று சிறிது நேரம் செயலிழந்தன. அதுகுறித்து தகவலறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகம், சி.சி.டி.வி காமிராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததாகவும், அதிக வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் எனவும்,

20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கியதாக என ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், ஸ்ட்ராங் கேமராக்கள் சிறிது நேரம் செயல் இழப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மூன்றடுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பதிலளித்து உள்ளனர்.

குளுகுளு ஊட்டியில் அதிக வெயிலால் சி.சி.டி.வி காமிராக்கள் செயலிழந்ததுதான் அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் முடிந்தாலும் கொங்குமண்டலம் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது.

-ஸ்பைடர்மேன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.