திடீரென முளைத்த போஸ்டர்கள் – உடன்பிறப்பை சீண்டிய கதர் கட்சி !
திமுக மாவட்ட செயலாளர் தளபதிக்கு ஆப்பு …. திமுக வசமுள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு.
மதுரையில் திமுகவின் வசம் உள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டு அத்தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ கோ. தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரை விமர்சனம் செய்து பொதுக்கூட்ட மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்படும் நிலை உருவானதால் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செயலாளர் கோ.தளபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரைவடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் சார்பில் சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் புகைச்சலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக திமுக வடக்கு தொகுதி சட்டமன்றஉறுப்பினர் மற்றும் நகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க தலைமை முடிவு செய்துள்ளதாக திமுகவினருடைய பேச்சாக உள்ளது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.