எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி ! பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

NDA கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம் என்று பாஜக-வின் தமிழக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டியளித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக தமிழக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுதாகர் ரெட்டி பேசியதாவது,

Srirangam MLA palaniyandi birthday

சுதாகர் ரெட்டி பேட்டி
சுதாகர் ரெட்டி பேட்டி

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

“தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். எங்களுக்கு தேவையான தொகுதிகளை நாங்கள் கேட்டு பெறுவோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

எடப்பாடி பழனிசாமி தற்போது மேற்கொள்ளும் அரசியல் பயணத்திற்கு பிரதமர் மோடியின் ஆசியும் வாழ்த்துக்களும் உள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மணல் மாபியா, கட்டப்பஞ்சாயத்து, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது” என்பதாக, பேசினார்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்த்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.