மனுசாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க – 5 உயிரை கொன்ற 3 சீட்ட
தெய்வங்களே… மனுசாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க… உங்ககிட்டதான் நான் பாடம் கத்துக்கணும்.. எனக்கு அதுலாம் கத்துக்க தெரியாதுப்பா. கருமாந்திரம் எழவு பிடிச்சவன் நான். மனுசாளுங்ககிட்ட நியாய தர்மம் இல்ல. என் பிள்ளைகள் மூன்று பேருக்கும் சயனைடு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன். நானும் சாப்பிடப் போறேன். இதுக்கப்புறம் என்னால் ஒண்ணுமே பண்ண முடியாது. ஜாலியா இருங்க. நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க. விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டை ஒழித்துவிடுங்கடா. என்ன மாதிரியான 10 பேரு பொழைப்பாங்க. என் பொண்ணு மூச்சு திணறுதுடா, சரி அது ஒண்ணும் பிரச்சினை இல்லை. நானும் கொஞ்ச நேரத்தில் சாக போகிறேன். ஏண்டா என்னை இப்படி வாட்டி வதைக்க வச்சிட்டீங்க. சங்கமே, தங்கமே என்பார்கள் அது நீங்கள் தான். நியாயமா எதாவது செய்யுங்களேன். என்னை போல கஷ்டப்படுபவர்களுக்கு எதையாவது செய்யுங்களேன். செய்ய மாட்டீங்க. செய்யலனாலும் பரவால்ல. என் 3 பிள்ளைங்களும் செத்து போச்சு. எனக்கும் சரக்குல ஊத்தி வச்சிருக்கேன். நானும் என் பொண்டாட்டியும் சாப்பிட்டுவிட்டு மொத்தமா எங்க வேலைய முடிக்கிறோம் . ஃப்ரியா இருக்கிறோம் .வாழ்க்கையில எவனுக்கும் தொல்லை கொடுக்க மாட்டோம். இங்கு வாழ முடியல என்று அருண் கூறுகிறார். இதோடு அந்த வீடியோ முடிகிறது.
மற்றொரு வீடியோவில் மூன்று குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்த பிறகு, உயிருக்குப் போராடுவது பதிவாகியுள்ளது. இதில் ஒரு வயது குழந்தை மட்டும் சோஃபாவில் இறந்து கிடக்கிறது.
இந்த வீடியோக்களை அருண் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது 5 பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.