போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு

நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்துள்ளார் .

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்தநிலையில் அந்த புகார் மனு சம்மந்தமாக விசாரிப்பதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் செந்தில்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது வீட்டில் செந்தில்குமார் இல்லாததால் அவரது மகனிடம் சாக்லெட் வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு அய்யாசாமி செந்தில்குமாரின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .

இதுகுறித்து தனது தந்தையிடம் சிறுமி கூறியதையடுத்து நன்னிலம் போலீஸ்நிலையத்தில் ஏட்டு அய்யாசாமி மீது புகார் மனு அளித்தார் . மேலும் சிறுமி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைக்கப்பட்டார் .

நன்னிலம் போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் புகார் தெரிவித்தார் . புகாரை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு துரை நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்தார் . அங்கு விசரானை மேற்கொண்டு போலீஸ் ஏட்டு அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் . விசாரணைக்கு சென்ற போலீசாரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.