சென்னை அண்ணாசாலையில் நடந்த தற்கொலைகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னை அண்ணாசாலையில் நடந்த தற்கொலைகள்!

போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னை அண்ணாசாலையில் இன்று விபத்து ஏற்பட்டு இருவர் பலி, ஒருவர் படுகாயம் என்கிற செய்தியை பலர் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் நாகலட்சுமி, பவானி என்கிற இரு பெண்கள். இவர்கள் தங்களது நண்பர் சிவா என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்கள்.

நந்தனம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பேருந்தின் சக்கரங்களில் சிக்கி இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இரு பெண்களும் மரமடைந்துவிட்டார்கள். வாகனத்தை ஓட்டிய சிவா, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல் தவறு இரு சக்கரவாகனத்தில் மூவர் சென்றது.

அடுத்த தவறு, வாகனத்தை ஓட்டிய சிவா என்கிற நபர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியவில்லை.

மூன்றாவது தவறு.. அதிவேகமாகச் சென்றதோடு… முன்னால் சென்ற பேருந்தை இடப்புறமாக முந்த முயன்றிருக்கிறார்.

வாகனத்தை ஓட்ட எத்தனையோ சட்டதிட்டங்கள்..! ஆனால், பலர் இவற்றை பின்பற்றுவதில்லை.

ஆகவே… இதுபோன்ற விபத்துக்களை தானே மரணத்தைத் தேடிக்கொள்ளும் தற்கொலை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

சாலை விதிகளை மதிப்பது நமது கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

 

 

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.