சூஜி ஃபர்கர் ! சமையல் குறிப்பு – 28

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு சிம்பிளா ரவை மற்றும் பொட்டேட்டோவ வச்சு அதுல கிரிஸ்பியான பர்கர் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இது குட்டீஸ்க்கு வித்தியாசமான சுவைய கொடுக்கிறதா இருக்கும். வாங்க செய்முறைக்கான விளக்கத்தை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ரவை 1 கப், சீரகம் ஒரு ஸ்பூன், வேகவைத்த உருளைக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று, கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சிறிதளவு, தக்காளி இரண்டு பொடியாக நறுக்கியது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ரவையை அதில் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை (பூரிமாவு பதம்) கிளறவும். அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதன்பின் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு நன்கு வதக்கவும். இப்போது ஃபர்கர் உள் வைக்கும் ஸ்டஃபிங்க்ஸ் தயார். அடுத்தது பிசைந்து வைத்த ரவை எடுத்து பூரி மாவு தேய்ப்பது போல் தேய்த்து அதனை சிறிய வட்ட வடிவில் அச்சு வார்த்து எடுத்து அதன் மேல் உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்ஸ் சிறிது வைத்து அதன் மேல் ரவை தேய்த்ததை வைத்து தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மேலும் கீழும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இப்போது சுவையான சூடான வெஜி ஃபர்கர் தயார்.

 

  —     பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.