அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் கோல்டன் தடகள மன்ற செயலாளர் என்.ராஜேந்திரன் தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க துணைச்செயலாளர்கள் ரமேஷ், தமிழரசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வந்தவர்கள் முன்னாள் கோல்டன் தடகள மன்ற செயலாளர் ரெங்கச்சாரி வரவேற்றார்.

கோடை கால பயிற்சி முகாம்
கோடை கால பயிற்சி முகாம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கோடைகால பயிற்சி முகாமில் ஒட்டப்பந்தயம், நிளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றக்கான உடற்பயிற்சி அளிக்கப்பட்டது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த கோடைகால பயிற்சி முகாம் 37 நாள்கள் நடந்தது, இதற்கான பயிற்சியை உடற்பயிற்சி ஆசிரியர்கள் முஸ்தபா, ரமேஷ், கனகராஜ், மற்றும் பள்ளி உடற்பயிற்சியாளர்கள் பயிற்சி கொடுத்தார்கள். இதில் 80 திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டார்கள்.

https://www.livyashree.com/

கோடை கால பயிற்சி முகாம்நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட (தெற்கு)  போலிஸ் துணை ஆணையர் T.ஈஸ்வரன் அவர்கள் கலந்துக் கொண்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

மேலும் திருச்சி மாவட்ட தடகள செயலாளர் D.ராஜு, ஒய்வு தலைமையாசிரியர் காணிக்கை இருதயராஜ் ஆகியோர் கலந்தக் கொண்ட மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்கள்.

கோடை கால பயிற்சி முகாம்விழாவிற்கு எஸ்.கவிதா, ரமேஷ்பாபு, மோகன்ராஜ், ஆரோக்கியராஜ், அகஸ்டின், சூரி, கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் கோல்டன் தடகள மன்ற எம்.கனகராஜ் நன்றியுரை கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.