சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் மற்றும் உலக அமைதிக்காக கிணற்று தண்ணீரில் 2 மணி நேரம் மிதந்து சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் மற்றும் உலக அமைதிக்காக 15 ஆம் ஆண்டு கிணற்று தண்ணீரில் 2 மணி நேரம் மிதந்து சாதனை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் பேரூராட்சி பகுதியில் தளபதி ஹோட்டல் நடத்தி வருபவர் தளபதி விஜயன் (66). இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் .
தீவிர ரசிகரான தளபதி விஜயன் ஆண்டுதோறும் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கிணற்று தண்ணீரில் மிதந்து சாதனை செய்து வருகிறார்.
மேலும் இன்று ரஜினிகாந்தின் 74 ஆம் ஆண்டு பிறந்தநாளில் சின்னமனூர் பகுதியில் உள்ள கிணற்றில் உலக அமைதிக்காக 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்.