அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’

திருச்சியில் அடகு நகையை விற்க

அங்குசம் பார்வையில் ‘ ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’  தயாரிப்பு : அருண் விஷுவல்ஸ் கோவை ரமேஷ், டைரக்டர் : ராஜசேகர் கோ. ஆர்டிஸ்ட்: த்ரிகுண்,ஸ்ரீஜித்தா கோஸ், இனியா ,  சுந்தரா டிராவல்ஸ் ராதா, தம்பி ராமையா, ரவி மரியா, சத்யன், மதன் பாப், மற்றும் பல ஜில் ஜில் இளசுகள் ஒளிப்பதிவு : சி.விஜயஸ்ரீ, இசை : அருணகிரி, எடிட்டிங்: கே.குமார், நடனம்: ஐ.ராதிகா, பிஆர்ஓ :புவன் செல்வராஜ்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்  ஹீரோ த்ரிகுண் கணக்குப் பாடத்தில் புலி. அதைவிட பெண்களை கரெக்ட் பண்ணுவதில் சூரப்புலி. இப்படிப்பட்டவரிடம் கணக்குப் பாடம் கற்க வருகிறார். முதலாம் ஆண்டு படிக்கும் ஹீரோயின் ஸ்ரீஜித்தா கோஸ். இருவரும் ஒரு நாள் டேட்டிங் போகிறார்கள். போன இடத்தில் சும்மா இருப்பார்களா? ’மேட்டர்’ சுபமாக நடக்கிறது. எல்லாம் முடிந்ததும் தனது வலையில் வீழ்ந்த இரண்டு பெண்களிடம் செய்த லீலைகளைச் சொல்கிறார். த்ரிகுண். அதுக்கப்புறம் கோஸை கல்யாணமும் பண்ணுகிறார் த்ரிகுண்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Sweetie Naughty Crazyகோஸ் வீட்டுக்குப் போன பின் தான் தெரிகிறது அந்த லீலை நாயகிகளில் ஒருவர் ஸ்ரீஜித்தாவின் அக்கா, இன்னொருவர் அம்மா. அதுக்கப்புறம்..?அதுக்கப்புறம் என்ன ஒரே அஜால்குஜால் தான் ஆபாசக் கூத்து தான்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஸ்ரீஜித்தாவின் அம்மாவாக சுந்தரா டிராவல்ஸ் ராதா, அக்காவாக இனியா. இதில் இனியா தான் ஷகிலா ரேஞ்சுக்கு புகுந்து விளையாடியிருக்கிறார். காஸ்ட்யூமில் இறங்கியடித்து கதிகலங்க வைக்கிறார். இதே ரூட்ல போனா பிரைட்டான எதிர்காலம் இனியாவுக்கு இருக்கு. பணப்பெட்டி பிதுங்கி வழியும்.  அதே போல் த்ரிகுண் முதுகில் மோதி பிளம்ஸ் பழத்தை வெளியே [ அட ஹீரோவின் வாயில் அடைச்சுருச்சுங்க] எடுக்கும் ராதாவின்  டெக்னிக்கெல்லாம் தமிழ் சினிமா கண்டறியாத அற்புதக்  காட்சி. இனியாவின் கணவனாக சத்யனும் ராதாவின் கணவனாக தம்பி ராமையாவும் பிம்பிளிக்கி பிலாக்கி விளையாடியிருக்கிறார்கள். படம் முழுக்க பச்சையான வசனங்கள் [ லொக்கேஷன் வேற ஏற்காடு ] நீலக்காட்சிகள். உபயம் : ஸ்ரீஜித்தா கோஸ். இந்த சின்ன வயசுல இப்படியாம்மா புகுந்து விளையாடுவ?

Admission Enquiry Form

Sweetie Naughty Crazyகிளுகிளு…குளுகுளு…ஜிலுஜிலு படங்களின் ரசிர்களுக்காகவே தனது பணத்தை செலவழித்த பரந்த மனசுக்காரர்  தயாரிப்பாளர் கோவை ரமேஷ். கொஞ்சம் பிசகினாலும் எசகுபிசகாகிரும்னு சில சினிமாக்களை விமர்சனம் பண்ணிருப்போம். ஆனால் இதுல டைரக்டர் ராஜசேகரோ… பக்காவா ப்ளான் போட்டு நல்லாவே பிசகி ரொம்ப ரொம்ப எசகுபிசகா எடுத்து ரொம்பவே டயர்டாகியிருப்பார்னு நினைக்கிறோம். தயாரிப்பாளர் மட்டும் சும்மாவா இருந்திருப்பார்? ஏம்பா இம்புட்டுச் செல்வழிச்சது எதுக்கு நினைக்கிறீக?  எல்லாமே அதுக்குத்தான்…

அங்குசம் பார்வையில் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ 37/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.