அங்குசம் சேனலில் இணைய

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி  முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிப்ரவரி 01 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை நடைபெற உள்ளது.

தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச, அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூடுகையில், உலகம் முழுவதிலும் பல்வேறு பொறுப்புகளிலுள்ள கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி வந்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கல்லூரிச் செயலர்  அருள்முனைவர் கு.அமல், சே.ச, கல்லூரி முதல்வரும், முன்னாள் மாணவர் மன்றத்தின் இயக்குநருமான  அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச,  இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கின்றனர். முன்னாள் மாணவர் மன்றத்தின் தலைவர் சிஏ டாக்டர் பண்ணை கார்த்திகேயன் வரவேற்புரையாற்றுகிறார்.

கல்லூரியின் முன்னாள் மாணவர் இந்திய பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனங்களின்  பொதுச் செயலாளருமான திரு.தர்மராஜ் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்றுச் சிறப்புரையாற்ந உள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சென்னைப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் வழிகாட்டி குழுவின் உறுப்பினரான கல்லூரின் முன்னாள் மாணவர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தங்கள் துறைகளில் சிறந்து விளங்கிய முன்னாள் மாணவர்களான மூத்த வழக்கறிஞர் திரு. ஸ்டானிஸ்லாஸ், அமெரிக்க நாட்டின் ஆரக்கல் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் திரு எட்வர்ட் ஜெயராஜ், அண்ணா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் வி மாசிலாமணி மற்றும் எல்.ஜி.டி.வி வணிக நிறுவன மேலாண் இயக்குனர் திரு வில்பிரெட் செல்வராஜ் ஆகியோருக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட உள்ளது. .

இண்டேக்ட் இந்தியா அமைப்பினுடைய மேலாண்மை இயக்குனர் திரு தாமஸ் எபினேசர் மற்றும் சிறகுகள் சமூக சேவை அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு சுந்தரம் ஆகியோருக்கு அன்னை தெரசா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட இருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிகழ்வின் தொடக்கத்தில் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள், நிகழ்வின் இடையிடையே முன்னாள் மாணவர்களின் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அமர்வு, நிகழ்வின் இறுதியில், அறுசுவை உணவு என விழாத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள், முன்னாள் இந்நாள் பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் என உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் இவ்விழாவில் பங்கேற்க உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவ மன்ற இயக்குனரும் கல்லூரியின் முதல்வருமான அருள் முனைவர் மரியதாஸ் தலைமையில், முன்னாள் மாணவர் மன்றத்தலைவர்  சிஏ டாக்டர் பண்ணை கார்த்திகேயன் மற்றும் முன்னாள் மாணவர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர் என கல்லூரி சார்பாக தொிவிக்கப்பட்டுள்ளது.

 

—  அங்குசம் செய்திகள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.