உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் பறக்கத்துவங்கும் போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை (crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும். அதனால், இதை விசிறிக் கொண்டை குருவி என்கின்றனர்.
ஒவ்வொரு குயிலினமும் தமது முட்டையின் உருவத்தையும், வடிவத்தையும் மிகவும் கவனமாக வளர்க்கும் பறவையின் (host bird) முட்டையினுடையதைப் போல இருக்குமாறு இடுவதை மிகவும் திறமையாக பயின்றுவருகின்றன.