முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.
இது பேய்ப்படம் அல்ல. ஆனால் பேய்ப்படம் போல திகிலாகத் தான் ஆரம்பிக்குது. டம்மு டம்முன்னு சத்தம் கேட்குது. ஒரு கருப்பு உருவம் வீட்டுக்குள் கிடக்குது. திடீரென யாரோ முதுகில் கத்தியால் குத்துகிறார்கள். அலறியடித்து எழுகிறார் இந்திரா . திகில் கனவு…