தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களிடம் அனலாக் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பாகவும் செயலாக்கம் இல்லாத இலவச செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பது தொடர்பாக இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று தேனி மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நல சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளான காவல்துறை வருவாய்த்துறையை பயன்படுத்தி கேபிள் டிவி ஆபரேட்டர்களை குற்றவாளி போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியும், இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரையத்தொகை என்று சொல்லி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த கோரியும், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு சிக்னலும் உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்யக் கோரியும், தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நல வாரியத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்க தேனி மாவட்ட தலைவர் தமிழன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரனை நேரில் சந்தித்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கம் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்