கூட்டணி குறித்து கே.எஸ்.அழகிரியின் பேச்சு – அரசியல் சலசலப்பு!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

டிசம்பர் 30ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை இந்திராகாந்தி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில், காமராஜர் ஆட்சியை பற்றி காங்கிரஸ் தற்போது பேச வில்லை என்று ஊடக நண்பர்கள் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜரின் ஆட்சி அமையும், 40 ஆண்டுகால கூட்டணியில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை தான் சந்தித்து இருக்கிறது. கூட்டணியால் காங்கிரஸுக்கு ஒரு பயனும் இல்லை, கூட்டணி இல்லாமல் காங்கிரஸில் நிற்கத் தயாரா என்று என்னிடம் கேள்விகள் எழுகிறது. மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் இருக்க தயாரா என்று கேட்க அது ஊடகங்கள், காங்கிரஸிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியை கேட்க வேண்டும். ஆனாலும் காங்கிரஸ் ஒரு அடி முன்,ஒரு அடி பின் வைக்கிறது. இப்படி தான் இத்தனை ஆண்டுகாலம் அமைந்திருக்கிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி சட்டமன்ற தேர்தலின் போது மு க ஸ்டாலின் தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தினார். அதனால் அவர் கொஞ்சம் காலம் முதல்வராக இருக்கட்டும். நாங்கள் அவரை முதல்வராக வரவேற்கிறோம், திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை.

3

அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் வளர்க்க வேண்டும், ஒரு தெருவில் 500 காங்கிரஸ் கொடியை பறக்கவிட வைக்கவேண்டும். பட்டிதொட்டியெங்கும், கிராமப்புறங்கள் எங்கும் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். இப்படி வளர்த்தால் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைவது உறுதி என்று பேசினர்.
சமீபத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகளின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மூன்றாவது அணியின் பக்கம் திமுக செல்ல வாய்ப்பில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் சூசகமாக அறிவித்திருந்தார். இப்படி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை முக ஸ்டாலின் உறுதி செய்திருந்தார்.

அதேநேரம் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் வலிமையாக இருப்பதாகவும், மூன்றாவது அணி பாஜகவிற்கு பலம் சேர்க்கும் என்றும் பேசியிருந்தார். இப்படி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளை வலிமைப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய எதிர்க்கட்சிகளின் தலைமையாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் தமிழ்நாட்டில் பேசியிருக்கும் பேச்சு அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

4

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.