பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்?
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறதாம். அதனால் தமிழ்நாடு அரசு என்ன செய்தது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறது. அதே நேரம் பிரதமர் வருகை, தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், பொங்கல் பண்டிகை என்று பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்த நடக்க இருப்பதால் தற்போது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தவும் வாய்ப்பில்லை, அதன் காரணமாக தேர்தல் நேரத்தில் நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் மீண்டும் சவாலான நேரம் என்ற தேர்தல் ஆணைய வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர்.
அதேநேரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களின் தலைவர்களான மேயர் மற்றும் சேர்மன் பதவிக்கான தேர்தலை நேரடியாக நடத்துவதா அல்லது மறைமுக தேர்தலின் அடிப்படையில் நடத்துவதா என்று தமிழக அரசு குழப்பத்தில் இருக்கிறதாம்.
திமுக நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் நேரடித் தேர்தல் நடத்துவது திமுகவிற்கு பலமாக அமையும் என்றும் மற்றொரு தரப்பினர் மறைமுகத் தேர்தல் நடத்துவது திமுகவிற்கு பலமாக இருக்கும் என்றும் தலைமைக்கு இரண்டு விதமான கருத்துக்களைக் கூறி வருவதால் தலைமை இந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேநேரம் தற்போது தொடங்கியிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவதற்குள் நேரடி தேர்தலா அல்லது மறைமுக தேர்தலா என்பது முடிவு செய்யப்பட்டுவிடும்.
மேலும் திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணியில் மேயர் சீட் மற்றும் சேர்மன், நகராட்சித் தலைவர் பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளை எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் திமுக தலைமையோ, திமுகவுக்கு 97 சதவீத இடங்களிம், 3 சதவீத இடங்களை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாதாம்.
அதிமுக கூட்டணியிலும் இதுபோன்ற பேச்சுக்கள் எழ தொடங்கி இருக்கிறது. அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சீனியர் தரப்பில் ஒரு கருத்தை எழுந்தவுடன், ஓபிஎஸ் பாஜகவுடனான கூட்டணியை முறிப்பது தற்போது ஏற்றதல்ல என்று கூறி பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறாராம். அதேநேரம் கூட்டணியில் பாஜகவிற்கு அதிகம் இடம் தருவது, திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் அதனால் மிகக்குறைவான இடங்களை ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
மேலும் திமுக, அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பு அடைந்திருக்கிறது.