திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் நாடு தின கொண்டாட்டம் !
திருச்சி, தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி) இல் உள்ள காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை, மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை இணைந்து வெள்ளிக்கிழமை சமூக மையம் அரங்கில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பாரம்பரிய கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் விழா அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சுநஎ. முனைவர் எஸ். மரியதாஸ் எஸ்.ஜே.இ துணை முதல்வர் முனைவர் .டி.குமார், தொழில்சார் திட்டங்களின் நோடல் அதிகாரி முனைவர் பி. கணிகைராஜ் மற்றும் காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறைத் தலைவர் முனைவர் எஸ். தமிழரசி, மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை உதவி ஒருங்கிணைப்பாளர் பி.ஜெனோ சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 9:30 மணிக்கு சிறப்பு விருந்தினராக, திருமதி.சுகந்தி (ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியாளர்), முனைவர். ஜி பெஸ்கி (இணை பேராசிரியர்இ தமிழ் துறை), ராஜேஸ்வரன் பூபாலன், மோசஸ் உள்ளிட்ட பிரமுகர்களின் சம்பிரதாய வருகையுடன் நிகழ்வு தொடங்கியது.
பிரார்த்தனைப் பாடல், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாரம்பரிய விளக்கு ஏற்றும் விழாவைத் தொடர்ந்து, காட்சி தொடர்பியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் வி.விக்னேஷ் பாண்டியன் அனைவரையும் அன்புடன் வரவேற்றார், துணை முதல்வர் முனைவர் .டி. குமார் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி மரியாதை செய்தார்.
திருமதி.சுகந்தி (ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியாளர்) அவர்களை காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர் முனைவர். ஈ. வி. பிரபா மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சுகந்தி அவர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் நாட்டுப் புற பாடல்களையும் வரலாறுகளையும் இசை இடியாக முழங்க வெளிப்படுத்தினார்.
அடுத்த நிகழ்வாக மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை உதவி ஒருங்கிணைப்பாளர் பி.ஜெனோ சிந்தியா அவர்கள் முனைவர். ஜி பெஸ்கி (இணை பேராசிரியர்இ தமிழ் துறை)இ அவர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
முனைவர். ஜி பெஸ்கி அவர்கள் தமது தமிழ் ஆர்வதினையும் தமிழ் குறித்த வரலாற்று நிகழ்வுகளையும் அழகாக தமிழ் மணம் வீச எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து ராஜேஸ்வரன் பூபாலன், மோசஸ் அவர்களை ரம்யா மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். நாட்டுப்புற கலைகளின் முக்கியத்துவம் இவீதி நாடகத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மிக சிறப்பாக விளக்கினார்.
அதை தொடர்ந்து தமிழர் பண்பாடு, கலை, பாரம்பரியம் குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சி மற்றும் காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை இமென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை மாணவர்களின் நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு, சிலம்பாட்டம் ஆகியவை இடம்பெற்றன.
நிகழ்ச்சி மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் ரூபஸ் மேத்யூ சேர்வுட் அவர்களின் நன்றியுரை உடன்இ விழா இனிதே நிறைவு பெற்றது.மாணவர்களுக்கு தமிழ்நாடு தினம் மற்றும் தமிழர்களின் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.