தமிழகத்தை அச்சுறுத்தும் பிரபல ரவுடியை  தப்பிக்க வைக்கும் திமுக அமைச்சர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகத்தை அச்சுறும் பிரபல ரவுடியை  தப்பிக்க வைக்கும் திமுக அமைச்சர்கள்

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே கடந்த மார்ச் 23ம் தேதி, முசிறி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமான காரில் இருந்து 1 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Frontline hospital Trichy

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அதிகாரிகள் வசம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜ் ஏற்பாட்டின் பேரில் தேர்தல் செலவுக்காக 3 மூட்டைகளில் 10 கோடி ரூபாய் பணம் காரில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்நிலையில், கார் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சென்றபோது திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி சாமிரவி மற்றும் அவரது கூட்டாளிகள் காரை வழி மறித்து 2 மூட்டைகளில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே திருச்சி கீழச்சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் 31), ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா(எ) ராஜேந்திரன் (35), தெப்பக்குளத் தெருவை திலீப்குமார் (எ) லட்சுமி நாராயணன் (30), ராஜ்குமார் (31), சிவா (எ) குணசேகரன் (32), பிரகாஷ் (31), ராயர்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(25), கொள்ளிடக்கரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி சாமிரவி மட்டும் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து ரவுடி சாமிரவியை பிடிக்க ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவர் அருப்புக்கோட்டையில் மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் கும்பலோடு சேர்ந்து சாமிரவியும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது.

 

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அருப்புக்கோட்டையில் பதுங்கியிருந்த வரிச்சூர் செல்வம் மற்றும் ரவுடி சாமிரவியை சுற்றி வளைத்து கைது செய்தனர். ரவுடி சாமி ரவியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யார் இந்த சாமிரவி

 

 

2006-ல் திருச்சியில் ஐ.ஜி-யாக இருந்த ஜாஃபர் சேட் டீம், முட்டை ரவி என்ற ரவுடியை என்கவுன்டரில் போட்டுத் தள்ளியது. முட்டை ரவி மீது திருச்சி வட்டாரத்தில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என பல வழக்குகள் இருந்தன. முட்டை ரவிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் சாமி ரவியும் தான்.

முட்டை ரவி என்கவுன்டருக்கு பிறகு மறைமுகமாக பின்னணியில் இருந்து சாமி ரவி வெளியே தலைகாட்ட ஆரம்பித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சாமி ரவி ஒரு பொறியியல் பட்டதாரி. ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசுவான். ஆங்கிலப் படங்களை பார்த்து ஸ்கெட்ச் போடும் வித்தைகளைக் கற்றுக்கொண்டானாம். பல வழக்குகளில் சிக்கிய இவன், சில காலம் லண்டனில் தங்கியுள்ளான். மீண்டும் திருச்சி வந்த  சாமி ரவி, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, சாதி அமைப்பு ஒன்றில் பொறுப்பை வாங்கியுள்ளான். அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் அவருடைய மாமனார் இருப்பதால் தற்போது வரை அவர்கள் அவனுக்கு பக்கபலமாக உள்ளனர்.

குரங்கு குமார் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளான்

தமிழக பிரபல தொழில் அதிபர்களை கோடிக்கணக்கில் கூலி வாங்கி கொண்டு கொலை செய்யும் கும்பலின் தலைவனாக மாறினார்.

தமிழகம் – பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்த பல கொலைகளுக்கு சாமிரவி மூளையாக இருந்தாலும் அவருடைய பெயர் போலிஸ் வட்டாரத்தில் அடிப்படாமல் பார்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் திருச்சி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் அப்போது ஸ்பெஷல் டீமில் இருந்த கோடிலிங்கம் இன்ஸ்பெக்டர் பிடித்தார். சாமிரவிக்கும் ராமஜெயம் கொலைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என அவர் விசாரித்தார். வழக்கமாக கொலைவழக்கில் தொடர்புடைய ரவுடியை பிடித்தால், போலீசார் அடித்து கை, கால்களை உடைப்பார்கள். “அப்படி எதுவும் செய்யக்கூடாது’ என கோடிலிங்கத்திடம் தமிழகம் முழுவதுமிருந்து போலீஸ் அதிகாரிகள் பேசினார்கள். குறிப்பாக திமுக வழக்கறிஞர்களே பேசினார்.

அந்த விசாரணையில் சிதம்பரம் பகுதியில் நடந்த கொலையில் சாமிரவிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த்தும் போலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் திமுக தரப்பில் சாமிரவியை விடுவிக்க சொல்லி  பிரஷர் வந்தால் சாமிரவியை விட்டு விட்டனர்.

அப்போது தலைமறைவான சாமிரவியை பிடிப்பதற்கு 2012ம் ஆண்டு முதல் தமிழக போலிஸ் வலைவீசி தேடிக்கொண்டிருந்து. காரணம் சாமிரவி கட்ந்த திமுக ஆட்சியில் மன்னார்குடி வகையறா இளவரசி மகன் விவேக் வலதுகரமாக மாறியதால் போலிஸ் சாமிரவியை தொடவே பயந்த்து. சசிகலாவின் பலம் குறைந்தவுடன், ஓ.பி.எஸ். குடும்பத்தில் ஐக்கியமானார். முழுக்க முழுக்க அதிமுக அதிகார வட்டத்திற்குள் நுழைந்த அவர் அரசியல்வாதிகளுக்காகவும், தொழில் அதிபர்களுக்காகவும் தமிழகம் முழுவதும் சட்டவிரேத செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாட செய்வதற்கு சாமிரவி ஆட்கள் பாதுகாப்பாக சென்றனர். அப்படி பாதுகாப்புக்கு சென்ற பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் தான் தற்போது திமுக ஆட்சியில் பிடிபட்டு போலிஸ் விசாரணையில் இருக்கிறார்.

விசாரணையில் இருக்கும் சாமிரவி மீது திருச்சி உள்ளிட்ட தமிழக முழுவதும் தொழில் அதிபர்கள் கடத்தல், கடத்தல் மற்றும் கொலை மிரட்டல், கொலை வழக்குகள் அனைத்தையும் தூசி தட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் போலிஸ் விசாரணையில் இருக்கும் சாமிரவியை விடுவிக்க சொல்லி தற்போது திமுகவில் அமைச்சர் உள்ளிட்ட 5 முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில்  சாமிரவியிடம் இருந்து 1.65 கோடி பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டி சப்ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இனி தமிழக அரசும் காவல்துறையும் சாமிரவி விவகாரத்தில் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.