ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனையில் ஈடுபட்ட திருச்சி போலீசார்..
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனையில் ஈடுபட்ட திருச்சி போலீசார்..
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பேருந்து போக்குவரத்து வசதி தமிழகத்தில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ரயில்வே போக்குவரத்து மட்டும் தகுந்த நடைமுறையின் கீழ் பாதியாக ரயில்வே சேவையை குறித்து இயக்கி வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகளில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் கடத்தல் கஞ்சா எடுத்துச் செல்லுதல் என்று இருந்து வருகின்றனர். இதனை ரயில்வே பாதுகாப்பு நிர்வாகம் ரயில்வே போலீசார் ஆராய்ந்து முன்னெடுத்து தகுந்த சோதனை கீழ் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 15/06/2021 மதியம் மதுரை ரயில் நிலையத்துக்கு மர்ம ஆசாமி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தகவல் கசிந்ததையடுத்து, மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையத்தில் ரயில்கள் மற்றும் பயணிகளை ரயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்தனர்.
இதில் திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் திருச்சி இருப்புப்பாதை காவல் டி.எஸ்.பி எட்வர்ட் தலைமையிலான ரயில்வே போலீசார் திடீரென ஹவுரா உள்ளிட்ட ரயிலில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மதுரையில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விட்ட மர்ம ஆசாமியை மதுரை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் மிரட்டல் விட்ட நபர் ஒரு மனநோயாளி என்று தெரியவந்துள்ளது.
–ஜித்தன்