திருச்சி ரயில்வே பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..
திருச்சி ரயில்வே பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..
திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட k.சாத்தனூர் ரயில்வே தண்டவாள கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் கீர்த்திகா (வயது -24), இவர் வழக்கம்போல் இன்று 15/06/2021 காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான பணி நேர வேலையில் இருந்தபோது சாத்தனூர் பகுதியை சேர்ந்த சரவணன் எனும் நபர் ரயில்வே தண்டவாளத்தில் மதியம் 2 மணி அளவில் வண்டி எண் TN45BR1150 எனும் ஆக்டிவா பைக்கை தண்டவாள நடுவே நிறுத்திவிட்டு குடிபோதையில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அதனைக் கண்ட கீர்த்திகா ரயில் தண்டவாளத்தில் நிற்க வேண்டாம் கொஞ்சம் தள்ளிப்போய் வண்டி நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு சரவணன் நான் யார் என்று தெரியுமா என் சொத்து மதிப்பு என்ன தெரியுமா என்று முரணாக பேசியதுடன்
குடிபோதையில் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உடனே கீர்த்திகா தனது அப்பாவுக்கும் கே.கே நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அச்சமயம் வண்டியை எடுத்துக் கொண்டு சென்ற சரவணன் சிறிது நேரம் கழித்து TN47Z1234 பொலிரோ காரில் வந்து திரும்பவும் தண்டவாள நடுவில் நிறுத்தியுள்ளார். பணியிலிருந்த கீர்த்திகா வெளியே வர கூறி உன் மீது காரை ஏற்றி கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டியதுடன் அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்திகா கேகே நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கா.நி.கு எண் 311/2021, U/s.294(b) 353,506(Ii) IPC r/w ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
–ஜித்தன்