‘நான் பறந்துட்டேன்டா’ தமிழக அரசுபள்ளி குழந்தைகள் தென்கொரியாவில் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விமான பயணம்
விமான பயணம்

பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்த வெளிநாடு கல்விச் சுற்றுலாவிற்கு 25 குழந்தைகள் ஆறு ஆசிரியர்கள் மற்றும் 2 உயர் அதிகாரிகள் என 33 பேர் குழுவாக தென் கொரிய நாட்டிற்கு புறப்பட்டோம். சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்திற்குள் நுழைந்து கடவுச்சீட்டில் குடியேற்றத்திற்கான முத்திரை வைக்கப்பட்டு விமானத்தை நெருங்கினோம். எங்களின் பலருக்கும் அதுதான் முதல் விமானப் பயணம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

விமானத்தினை அருகினில் கண்டு ரசித்தோம். விமானம் ஏறுவதற்கு முன்பிருந்த காத்திருப்பு நேரத்தில் பல்வேறு நாடுகளின் விமான சேவையையும் விமானங்களின் வகைகளையும் அறிந்தோம். அதன்பிறகு விமானம் ஏறி எங்களுக்கான இருக்கையில் அமர்ந்தோம். விமான அதன் ஓடுதளத்தில் இருந்து சற்று மேலெழும்பியதும் அருகிலிருந்த ராகுலின் ‘நான் பறந்துட்டேன்டா’ என்ற பரவச வார்த்தைகளில் எங்கள் பயணம் தொடங்கியது.

Tamil Nadu government school children in South Korea

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

மேகங்களை கடந்து உயர உயர சென்னை நகரத்தையும் அதன் கரையை தொடும் அலைகளையும் மேலிருந்து ரசித்தோம். மேலும் வளைந்தோடும் நதிகளையும் சிறு சிறு தீவுகளையும் , மேகங்ககூட்டங்களையும் அதன் நிழலை ஏந்திய கடலின் மேற்பரப்பையும் அதன் பரப்பில் ஊர்ந்து செல்லும் கப்பல்களையும் வானில் வட்டமடித்து கண்டு ரசித்தபடியே கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையம் வந்து சேர்ந்தோம். விமான நிலையத்தின் ஒரு முனையத்திலிருந்து இன்னொரு முனையத்திற்கு இரயில் மற்றும் பேருந்து சேவை இயங்கும் அளவிற்கான பெரிய விமான நிலையம் அது. அங்கிருந்து மற்றொரு விமானத்தில் தென்கொரியா தலைநகர் சியோல் வந்து சேர்ந்தோம். எங்களை கொரிய பயணவழிகாட்டி வரவேற்றார்.

தமிழக அரசுபள்ளி குழந்தைகள் தென்கொரியாவில் அன்று இரவு ஒற்றை இலக்க வெப்பநிலையில் சியோல் நகரத்தின் சாலைகளையும், விதிகளை மீறாத வாகனங்களையும் அந்நகரத்தின் நடுவே ஓடும் சிறு ஓடையையும், நகரின் பிரமாண்ட கட்டுமானங்களையும் மின்னும் அலங்கார விளக்குகளையும் கண்டு பிரம்மித்தோம்.

Tamil Nadu government school children in South Korea
Tamil Nadu government school children in South Korea

அடுத்தநாள் காலையில் கொரிய உணவை ருசித்தோம் அது வித்தியாசமான சுவையாக இருந்தது. ஒரு மண் சார்ந்த மக்களையும் அதன் பண்பாட்டையும் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் முதலில் அவர்களின் உணவில் இருந்து தொடங்க வேண்டுமென்று எங்கோ படித்தது நினைவுக்கு வர எல்லாவற்றையும் ருசி பார்த்தோம். ருசி பிடித்துப்போன உணவை கூடுதலாக உட்கொண்டோம். அதிலும் நம்ம ஊரில் குற்றாலம் பகுதியில் கிடைக்கும் ரம்பூட்டான் போன்ற பழம் வைத்திருந்தார்கள். அந்த பழத்தை உண்ணும் போது பன்னீர் சோடாவில் ஊர வைத்து போல் இருந்தது. அதன் சுவை பிடித்து போக நிறைய பழங்கள் சாப்பிட்டோம். தண்ணீர் கலக்காத திராட்சை மற்றும் ஆரஞ்சு பழரசங்களை குவளை குவளையாக குடித்தோம்.

கொரிய கட்டிடக் கலையின் சான்றாக இருக்கும் சங்டியோகுங்க் அரண்மனையை கொரிய பாரம்பரிய உடையணிந்து சுற்றிப்பார்த்தோம். கொரிய பாரம்பரிய உடையில் நாங்கள் எல்லோரும் கூடுதல் அழகாகவே தெரிந்தோம். பேருந்தில் போகும் வழியில் அந்த அரண்மனையினை பற்றியும் படையெடுப்புகளால் அரண்மனை சிதிலமடைந்த வரலாற்றையும் பயணவழிகாட்டி பகிர்ந்துக்கொண்டே வந்தார். இலையுதிர் காலம் என்பதால் சாலையோர மரங்களிலிருந்து உதிரும் மஞ்சள் சிவப்பு இலைகளால் நகரின் சாலைகள் அனைத்தும் கம்பளம் போர்த்திய அரண்மனை வாயிலாகவே காட்சியளித்தன. இங்குள்ள வாகனங்கள் ஒன்றுகூட சாலைவிதிகளை மீறவில்லை இரைச்சல் இல்லை காற்று மாசுபாடு இல்லை, சருகுகளை தவிர வீதிகளில் சிறுகாகிதங்கள் கூட இல்லை.

சாலைவிதிகளை மீறவில்லை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தென்கொரியாவின் அரசு பள்ளி ஒன்றை மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சரோடு பார்வையிட்டோம். குழந்தைகள் தங்கள் கலைகளை மேடையில் அரங்கேற்றினார். அந்நிகழ்வை இரு குழந்தைகள் தொகுத்து வழங்கினர். கொரிய குழந்தைகள் நம் குழந்தைகளை அன்போடு வரவேற்றனர். அங்கு அப்பள்ளியின் ஆசிரியர்களும் அந்த அரங்கின் தரையில் குழந்தைகளோடு குழந்தைகளாக அமர்ந்திருந்தனர். இன்று ஏதும் சிறப்பு நிகழ்வா ? என்றதற்கு இல்லை இது இங்கு அடிக்கடி நிகழும் இயல்பான ஒன்று தான் என்றனர். அங்குள்ள கற்பிக்கும் முறை, திறன் சார்ந்த ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானம் என அனைத்தையும் பார்வையிட்டோம்.

Tamil Nadu government school children in South Korea
Tamil Nadu government school children in South Korea

அங்கிருந்து கச்சான் பல்கலைகழகம் சென்றோம். அங்கிருக்கும் உயர் ஆய்வகங்களை பார்வையிட்டோம். தமிழ்பேசும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் எங்களை வழிநடத்தினார். ஒரு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கும் பல்கலைகழகத்தின் கல்விசார் ஆராய்சிக்குமான வித்தியாசத்தை கோவாக்சின் மற்றும் பைஃசர் கொரனா தடுப்பு மருந்தினை வைத்து எது மக்களுக்கானது எது நிறுவனத்திற்கானது என்பதை எளிமையாக விளக்கினார். அதனால் கல்விசார் ஆராய்ச்சிகளுக்கு பெரும் வாய்ப்பு இந்நாட்டில் இருக்கிறது என்றார் கச்சான் பல்கலைகழகம் ஆராய்ச்சி மாணவர்.

அன்று மாலை நடந்த கொரிய தமிழ் சங்கம் ஒருங்கிணைத்த கூட்டத்தில் கலந்துகொண்டு தென்கொரிய பல்கலைகழகங்களில் நம்ம நாட்டு குழந்தைகளுக்கு உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளையும் அவற்றிற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான உதவித்தொகை என பல்வேறு விடயங்களை குழந்தைகள் அறிந்துக்கொண்டனர். அன்றைய தினம் குழந்தைகள் சிலம்பரசன் மற்றும் தீபக் குமார் இருவருக்கும் பிறந்தநாள் என்பதால் அமைச்சர் தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி கொரிய தமிழ்ச்சங்கம் அளித்த விருந்தோம்பலில் கலந்துக்கொண்டு நம்ம ஊரு பிரியாணியையும் தயிர்சாதத்தையும் உட்கொண்டு அன்றிரவு கொரிய உணவிற்கு விடைகொடுத்தோம்.

சாலைவிதிகளை மீறவில்லை

மறுநாள் ஹிண்டாய் மோட்டார் ஸ்டியோவிற்கு சென்று விலையுயர்ந்த கார்களை கண்டோம். விலையுயர்ந்த கார்களின் அருகில் நின்றும் அதில் ஏறி அதனை இயக்குவது போன்று பாவனை செய்தும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தோம். ஒரு கார் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அதன் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தபடும் இரும்பு மூலம், வர்ணம், அதன் சொகுசு இருக்கைகள் அவற்றை செய்து முடிக்கும் தானியங்கி இயந்திரங்கள் என அறிந்து தானியங்கி இயந்திரங்களைக் கொண்டு குழந்தைகளே தம் கரங்களால் கார்களுக்கு வர்ணம் பூசி, அதன் இருக்கைகள் பொருத்தி மகிழ்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியை வியந்தனர். காரின் பாதுகாப்பு அம்சங்கள் எவ்வாறு சோதிக்கப்பட்டு அது எவ்வாறெல்லாம் மேம்படுத்தப்படுகிறது என்பது பற்றிய காட்சி விளக்கங்களை குழந்தைகள் புரிந்துக்கொண்டனர்.

அடுத்து Incheon Free Economic Zone (IFEZ ) எனப்படும் வர்த்தக நகரமான சொங்டோ விற்கு சென்றோம். அங்கிருக்கும் சென்ட்ரல் பார்க்கில் படகு சாவாரி செய்து அந்த நதியின் அழகையும் அதன் நீரில் பிரதிபலிக்கும் வானுயர்ந்த கட்டிடங்களையும் ரசித்தோம். G – Tower கட்டிடத்தின் 33 வது தளத்திலிருந்து அந்த நகரின் அழகை இரசித்தோம். இந்திய உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவோடு அன்றைய தினம் நிறைவடைந்தது.

பெரும்வாய்ப்பாக தென்கொரிய பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பாராளுமன்றம் குறித்த தரவுகள் மற்றும் அங்குள்ள அரசியல் முறை பற்றி மூத்த அதிகாரி விளக்க அதனை பாராளுமன்ற விவாத அரங்கில் அமர்ந்து கேட்டோம். முன்னதாக பாராளுமன்ற அருங்காட்சியம் சென்றோம் அங்கு எங்களை ஒரு ரோபோ வழிநடத்தியது. அதுவே எங்களை அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று விளக்கியது.

அங்கிருந்து மியாங்டங் சென்று ஷாப்பிங் செய்தோம். அதன் வீதிகளெங்கும் கடைகள், வீதிகளுக்கு நடுவே சிறு சிறு கடைகள் அந்த கடைகள் முழுவதும் விதவிதமான உணவுகள் என நம்ம ஊரின் 100 திருவிழாக்களின் நகரமாக தெரிந்தது அந்த வீதிகள். அந்த நகரின் நடக்கும் NANTA எனும் நாடகக்காட்சிக்கு சென்றிருந்தோம். இசைக்கருவிகளற்ற இசையும் வார்த்தைகளற்ற நகைச்சுவை பாவனைகளும் என வித்தியாசமான காட்சியை கண்டுகளித்தோம்.

இலையுதிர்கால தொடக்கத்தில் குளிரில் தோய்த்த காற்றினால் மூக்கின் நுனி உறையும் குளிரில் அந்நகர வீதிகளில் நடந்து கொரிய பயணத்தை முடித்துக்கொண்டோம்.

– அர்ஷத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.