எடப்பாடி தான் நிரந்தர முதல்வர்; கொங்கு விஐபிகள் சூளுரை !
எடப்பாடி தான் நிரந்தர முதல்வர்; கொங்கு விஐபிகள் சூளுரை !
கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவிற்கு மிகப்பெரிய வரலாற்று வெற்றிகளை பெற்று தந்திருக்கிறது. கொங்கு மண்டல அதிமுக கோட்டையை உடைப்பதற்கு பல்வேறு அரசியல் தந்திரங்களை கையாண்டு வருகிறது திமுக. ஆனால் ஜெ. மறைவு வரையிலும் அது சாத்தியமில்லாமல் போனது.
ஜெ. மறைவுக்கு பிறகு கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி முதல்வர் ஆனாவுடன் இவர்களின் பலம் இன்னும் கூடுதலாக மாறியிருக்கிறது என்கிறார்கள் கொங்கு மண்டல முக்கிய அரசியல் புள்ளிகள்…
இது குறித்து நாம் அவர்களிடம் பேசிய போது…
அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே யார் முதல்வர் வேட்பாளர் என்கிற போட்டியில் மிக நீண்ட போராட்டத்தில் சில சமசரங்களுக்கு இடையே எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார்.
கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் என 11 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் கிட்டதட்ட 73 தொகுதிகள் உள்ளடக்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, கொங்கு மண்டலம் செல்வ செழிப்போடு வளர்ந்திருக்கிறது.. இதனால் கொங்கு மண்டலம் சார்ந்த விஐபிகள் அனைவருடனும் முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி கே பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் கொங்கு மண்டலமே உற்சாகத்தில் விழாக்கோலம் கொண்டுள்ளதாம்.
இதைத் தொடர்ந்து கோவை மாநகரில் 200 க்கும் மேற்பட்ட கொங்கு மண்டலத்தின் முக்கிய தொழில் அதிபர்கள், விஐபிகள் ஒன்று கூடி ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
அந்தக் கூட்டத்தின் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த எத்தனை இயக்கங்கள், எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் ஆனால் நம் அனைவருடைய ஓட்டும், நம்மைச் சார்ந்தவர்களின் ஓட்டும் எடப்பாடிக்கு தான் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் எடப்பாடி கே பழனிச்சாமி-யை முதல்வராக கொண்டு வர வேண்டும் என்கிற முடிவு எடுத்திருக்கிறார்கள்.
இதனால் கொங்கு பகுதியை சேர்ந்த அதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள், தேர்தல் செலவுக்கு இனி பஞ்சம் இல்லை என்று கூறி உத்வேகத்தோடு செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.
இதே போன்று மற்ற மண்டலங்களில் உள்ள மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால்…….
.