தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் !
எல்லோருக்கும் எல்லாம் என்கிற தமிழக அரசின் பயணத்தில் வணிகர்களுடைய ஆதரவு முக்கியம் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் பேச்சு.
மதுரை காமராஜர் சாலை பகுதியில் இயங்கக்கூடிய தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் பங்குபெற்றார்.
தமிழ் தாய் வாழ்த்தோடு தொடங்கிய நிகழ்வில் விழா மேடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுவதற்கு முன்னர்அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய அவர் பவள விழாவில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார் என்று இவர்கள் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த ஆண்டும் இந்த அமைப்பும் ஒரே ஆண்டு என்பதில் பெருமிதம் கலைஞர் நூற்றாண்டு நடைபெற்று வரக்கூடிய வேளையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் நூற்றாண்டு கண்டுள்ளது மகிழ்ச்சி.
வனிகர்களாகிய உங்களுடைய பணிகள் எல்லாம் பாராட்டுதலுக்குரியது சுமார் 250 இணைப்புச் சங்கங்களோடு 5000 உறுப்பினர்களைக் கொண்டு இந்தியாவிலேயே மிகப்பெரிய வணிகர் சங்கமாக இருக்கக்கூடிய நீங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற தமிழக அரசின் பயணத்தில் வணிகர்கள் ஆகிய உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம் உங்களுடைய வளர்ச்சிக்கு தமிழக அரசு துணையாக இருக்கும்.
பொதுவாக வணிகர் சங்கம் சார்பாக அவ்வப்போது என்னை கோட்டையில் சந்தித்து பேசுவார் வணிகர்கள் பொதுமக்களிடம் வியாபார தந்திரத்தை எப்படி பயன்படுத்துவார்களோ அதைப்போலவே அவ்வப்போது என்னிடம் பேசி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்.
பெரும்பாலும் அவர்களுடைய கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தான் நினைக்கின்றேன். இங்கே மேடையில் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும் என்றார். தொடர்ந்து நூற்றாண்டு கால சாதனை புத்தகத்தை தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் உட்பட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் டாக்டர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…
குறிப்பு …விக்ரம ராஜாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் வந்து விட்டு சென்றாள் போதும் தலையை காட்டினால் போதும் என்று சொல்லி கடைசியாக என்னை மேடையிலும் பேச வைத்து விட்டார் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.