ஃப்ரீடம் அட் மிட்நைட்டின் 2வது டீசர் தற்போது… Sony LIV
ஃப்ரீடம் அட் மிட்நைட்டின் 2வது டீசர் தற்போது.. Sony LIV – இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஃப்ரீடம் அட்மிட் நைட் தொடரின் படைப்பாளர்கள் அதன் இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளனர்.
Dominique Lapierre மற்றும் Larry Collins ஆகியோரின் புகழ் பெற்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் அட் மிட்நைட் ஒரு அற்புதமான அரசியல் த்ரில்லர் ஆகும், இது 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததைச்சுற்றி நடத்த முக்கியமான நிகழ்வுகளை சக்தி வாய்ந்த முறையில் உயிர்ப்பிக்கிறது.

இது குறித்து இயக்குனர் நிகில் அத்வானி குறிப்பிடுகையில், “ஃப்ரீடம் அட் மிட்நைட்” என்பது வரலாற்றில் இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றின் சக்திவாய்ந்த பார்வையாகும்.
இந்த நிகழ்ச்சி கவனமான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அந்தக் காலத்தின் உணர்ச்சி மற்றும் அரசியல் குழப்பங்களைக் காட்டுகிறது. இது முக்கிய வரலாற்று நபர்களை ஆழமாகப் பார்க்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்கு வளர்ச்சியடைந்து, நடிகர்கள் தங்கள் பாத்திரங்களில் ஒன்றிப்போக அனுமதிக்கிறது.

கதை அரசியலைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு சகாப்தத்தை வடிவமைத்து தேசத்தின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மனித அனுபவங்கள், உணர்ச்சிகள் மற்றும் சவால்களின் மீள்பார்வையாக இது திகழ்கிறது” என்று கூறினார்.
ஸ்டுடியோ நெக்ஸ்டுடன் இணைந்து Emmay Entertainment (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரித்துள்ள இந்த நிகழ்ச்சியை நிகில் அத்வானி ஷோரன்னராகவும் இயக்குனராகவும் இயக்குகிறார் அபிநந்தன் குப்தா, அத்விதியாகரேங்தாஸ், குந்தீப்ஷர்மா, திவ்யவந்தி கௌர்சாராபாய், மற்றும் ஈதன் டெய்லர்ஆகியேரார் இதன் கதையை வடிவமைத்துள்ளனர்.
இந்தத் தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தந்த்குப்தா, மகாத்மாகாந்தியாக சிராக்வோஹ்ரா, சர்தார்வல்லபாய் பட்டேலாக ராஜேந்திரசாவ்லா, முகமது அலிஜின்னாவாக ஆரிஃப்ஜகாரியா, பாத்திமா ஜின்னாவாக இராதுபே, சரோஜினி குவாநாயுடுவாகமலிஷ்காமென்டோன்சா, லிஷ்காமென்டோன்சாஆகியோர்நடித்துள்ளனர்.

அலிகான், V.P.மேனனாக KC சங்கர், லார்ட்லூயிஸ் மவுண்ட்பேட்டனாக லூக் மெக்கிப்னி, லேடிஎட்வினாமவுண்ட்பேட்டனாககோர் டெலியாபுகேஜா, ஆர்க்கிபால்ட்வேவலாக அலிஸ்டர்ஃபின்லே, கிளெமென்ட்அட்லியாக ஆண்ட்ரூகுல்லம், சிரில்ராட்கிளிஃப்ஆகரிச்சர்ட்டெவர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஃப்ரீடம் அட் மிட்நைட்டிற்காக காத்திருங்கள், விரைவில் Sony LIVல் பிரத்தியேகமாகஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.