”பாட்டிலுக்கு பத்து ரூபாய்” தீராத பஞ்சாயத்து … டாஸ்மாக் பெரும் ஊழல் … குற்றச்சாட்டுகளை அடுக்கும் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டத்தில், தலைவர், பாலுச்சாமி, பொதுச் செயலாளர், இராஜா, பொருளாளர், அருள்மணி, மற்றும் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் சங்க உறுப்பினர்கள் கலந்து கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து டாஸ்மார்க் சில்லறை விற்பனை மதுபான கடைகளில் 21 ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் சுமார் 25 ஆயிரம் பணியாளர்கள் குறைவான ஊதியத்தில் கடினமாக உழைத்து வருவதாகவும்; தற்போது வரை அரசு நிர்ணயித்து வழங்கப்படும் சம்பளம் மேற்பார்வையாளர் ரூ.14 ஆயிரம் விற்பனையாளர் ரூ.13 ஆயிரம் உதவி விற்பனையாளர் ரூ. 10 ஆயிரம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்

கடந்த 21 ஆண்டுகளாகியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரமாக வழங்கப்படவில்லை அதேபோல் காலமுறை ஊதியம், மேற்படி ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. நிர்வாகமும் பணியாளர்கள் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்கும்போக்கை கண்டும் காணாமலும் இந்த அரசு உள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதற்கு நிரந்தர தீர்வு காண ஊழியர்களுக்கான பின்வரும் மாதச் சம்பளம், அதாவது மேற்பார்வையாளர் ரூ.50 ஆயிரம்; விற்பனையாளர் ரூ.40 ஆயிரமும்; உதவி விற்பணையாளர் ரூ.30 ஆயிரமும்; ஓய்வூதிய பலனாக சிறப்பு பணிக்கொடை ரூ.10 லட்சம் மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரமும், அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

டாஸ்மாக் மேலும், கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை டாஸ்மார்க் விற்பனையில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இதை விசாரிக்க  ஓய்வு பெற்ற நீதி அரசரை முன்பே அரசு  நியமித்து இருந்தால், இன்று ED போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளே வந்திருக்காது. இனிவரும் காலங்களிலாவது அரசு இதற்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும்; தமிழகத்தில் சுமார் 1 கோடியே 50 லட்சம் மதுபான பாட்டில்கள் தினசரி விற்பனையாகிறது” என டாஸ்மாக் நிர்வாகமே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

குடிகாரர்கள், காலி பாட்டில்களை மலை சார்ந்த காடுகள், சாலைகள், நீர் வழித்தடங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் போடுகிறார்கள். இதனால் மிருகங்களுக்கும், பொது மக்களுக்கும். சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இதனை சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகமே காலி பாட்டில்களை திரும்பப் பெற்று சேகரிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இந்தத் திட்டத்தையும் டாஸ்மார்க் ஊழியர்கள் மேல் செலுத்தி மேலும் பணிச்சுமையை அதிகமாக உள்ளதால், எனவே இந்த திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்.

காலி மது பாட்டில்கள்டாஸ்மாக் திறக்கும் நேரம் மதியம் 12:00 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இருக்க வேண்டும். அனுமதி இல்லாத பார்களை மூட வேண்டும். அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான கோரிக்கைகள் குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடமும், மாண்புமிகு அமைச்சர்களிடமும், கடிதம் மூலமாகவும், நேரிடையாகவும் பலமுறை சங்கம் சார்பில் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் அவப்பெயரும், நிதி இழப்பும் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் போராட்டங்கள் முன்னெடுத்தும் இன்று வரை எந்த பயனும் இல்லாமல் இருந்து வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் நிர்வாகத்திடமும், அமைச்சர்களிடமும் மீண்டும் முறையிடுவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது. இதே நிலை நீடித்தால்  2025 ஏப்ரல் இறுதியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழக அரசு டாஸ்மார்க் ஊழிய சங்கத்தினர் தெரிவித்தனர்.

 

—    மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.