கல்வியாண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர் விவகாரம்: தெளிவுபடுத்தும் ஐபெட்டோ அண்ணாமலை !
மே மாதம் தவிர கல்வியாண்டின் இடையில் எப்போது பணி நிறைவு பெற்றாலும்… கல்வியாண்டின் இடையில் பணி நிறைவு பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு உண்டு!.. மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களையும் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்களையும் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களிடம் இன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது உறுதிப்படுத்தினார்கள். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!…
மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களது சுற்றறிக்கை பற்றி அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் கேட்டபோது… மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக திருமதி காக்கர்லா உஷா இஆப, அவர்களும் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக திரு க.நந்தகுமார் இஆப, அவர்களும் இருந்த காலத்தில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அந்த செயல்முறைகளின் படி கல்வியாண்டின் இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாள் மே-31 வரையிலும் பணிநிடிப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதனை பின்பற்றி தான் பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி ஏப்ரல் 30ஆம் தேதி உடன் பணிநீடிப்பு நாள் நிறைவடைகிறது.. என்று நாம் தெரியப்படுத்தியிருந்தோம். என்று கூறியதோடு இந்த செய்தியினை எனது கருத்தாகவே தாங்கள் புலனப் பதிவு வழியாக தெரியப்படுத்துங்கள் என்று உறுதியுடன் தெரிவித்தார்கள்.

தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பூ. ஆ.நரேஷ் அவர்களை தொடர்பு கொண்டபோது… பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டதாகவும் மே மாதம் மட்டும்தான் பணி நீடிப்பு இல்லை என்பதை நம்மிடம் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிநீட்டிப்பு இல்லை என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார்கள் என்ற செய்தியை நம்மிடம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்கள் சொன்ன போது… நாம் ஒருகாலும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் அவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவர்களிடம் பதில் கூறினோம்.
சென்ற கல்வி ஆண்டில் குத்தாலம் ஒன்றியத்தில் 40 மாணவர்கள் பயிலும் ஈராசிரியர் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று கூறி பணியிலிருந்து விடுவித்து விட்டார்கள். அப்போது இணை இயக்குனராக இருந்த திருகோபிதாஸ் அவர்களிடம் நாம் எடுத்துக் கூறியும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் நெருங்கிய உறவினர் என்ற அடிப்படையில் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்ற தகவலினை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் தெரிவித்த போது இயக்குனர் அவர்கள் பெரிதும் வருத்தப்பட்டார்கள்.
கல்வியாண்டின் இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு இல்லை என்று தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளீர்களா?.. என்று கேட்டபோது மிக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் அப்படிப்பட்ட எந்த தகவலும் எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்று உறுதிபட தெரிவித்தார்கள்.*
பணி நீடிப்பு தகவலினை புலனப்பதிவு வழியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!.. என்று இயக்குனர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.
மாணவர்கள் கல்வி நலன் கருதி அந்த பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடமாக இருந்தாலும் கூட வேறு பள்ளியில் மாற்றுப் பணியில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்தார்கள்.
கோரிக்கைகளுக்காக சமரசம் இல்லாத போராளியாக நாம் போராட வேண்டும்!… ஆனால் உண்மைத் தன்மை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பணி நீட்டிப்பு பறிபோய்விட்டதே!… என தனி ஆசிரியர்கள் புலனப் பதிவிடுவதும், சங்கத் தலைவர்களை கூட்டமைப்புகளில் பலவீனப்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும். தவறான தகவலினை பதிவிட்டால் நன்னடத்தை விதிகளுக்குள் நாமே சென்று பாதிப்பில் சிக்கிக் கொள்வதாகவும்… என அறிவுரை வழங்குகிறோம். எந்த பாதிப்பாக இருந்தாலும் அவரவர் சங்கத் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்!. புலனப் பதிவுகளில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட வேண்டாம்!.. என உரிமை உறவுடன் கேட்டுக்கொள்கிறோம்!.
மாணவர்கள் கல்வி நலனை காப்போம்!… தரமான கல்வி அளிப்பதில் அக்கறையுடன் செயல்படுவோம்!…