சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு ! போலீசாரை துப்பாக்கியால் மிரட்டிய காவலாளி கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போலீசாரை துப்பாக்கியால் மிரட்டிய சீமான் வீட்டு சாவலாளி!

இனிய ரமலான் வாழ்த்துகள்

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு ! துப்பாக்கியை காட்டி?  போலீசார்களை மிரட்டிய காவலாளி கைது!  – ஓசூரில் இருக்கும் சீமான் தப்பி செல்ல திட்டம்?

வீட்டில் ஒட்டப்பட்டிருந்த போலீஸ் சம்மன் கிழிப்பு!  போலீஸ் மீது துப்பாக்கி சூடு ? நடத்த இருந்த சீமான் வீட்டில் இருந்த இருவர் கைது,  ஓசூரில் இருக்கும் சீமான் தப்பி செல்ல திட்டம்?

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது. நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை, கருகலைப்பு ஆகிய புகார்களை கொடுத்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து .

இந்த வாழ்க்கை அவ்வளவு எளிதில் விடமுடியாது விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீஸாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார் .

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் பட்சத்தில் அவரிடம் உடல்  பரிசோதனை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சீமான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  சூடப்பா கல்யாண மண்டபத்தில் இன்று   கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று இருப்பதால் அவர் ஆஜராக போவதில்லை.

அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் நாங்கள் ஆஜராகி, இந்தப் புகார் குறித்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்  எனக் கடிதம் கொடுத்து உள்ளனர் .

சம்மன் கிழிப்பு
சம்மன் கிழிப்பு

இதற்கிடையில், அதனை ஏற்க மறுத்து வளசரவாக்கம் காவல்துறையினர் மீண்டும்  சீமான் வீட்டில் கைது எச்சரிக்கையோடு சம்மனை இன்று  ஒட்டி சென்ற நிலையில் அந்த சம்மனை  சீமான் வீட்டில் இருந்த இருவர் கிழித்துள்ளனர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இதனை அறிந்த,  போலீசார்கள் வீட்டின் கதவை திறந்து எச்சரித்துள்ளார்கள் அப்போது  சீமான் வீட்டில் இருந்த காவலாளி ஒருவர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்டதாக  கூறப்படுகிறது.

சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல்

முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல்.

அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமானின் காவலாளிக்கும் – காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் “சீமானின் காவலாளியை”  போலீசார்கள் கைது செய்திருக்கின்றனர். சம்மனை  கிழித்த “சுபாகர்” என்ற  நபரையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே இன்று கட்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு நேற்று இரவே கிருஷ்ணகிரிக்கு வந்த சீமான் இன்று ஓசூரில் நடைப்பெற்ற கலந்தாய்வு கூட்டம்  1 மணி நேரம் மட்டுமே நடைப்பெற்றது.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சீமான் திமுக அரசை மிக கடுமையாக சாடினார்.

அப்போது , மத்திய அரசுக்கு, தமிழ்நாடு என்றாலே வெறுப்பாக உள்ளது. காமராஜர், அண்ணா, இவர்களுக்கு பிறகு அரசியல் நேர்மை, தூய்மை செத்துவிட்டது .

கருணாநிதி முதல்வரான பிறகு, தமிழகத்தில் தீய சக்திகளின் அரசியல் ஆட்சி தொடங்கி விட்டது.

நடிகை வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் மேலும்  அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிப்பேன் என்றார்.

இதனையடுத்து,  கிருஷ்ணகிரியில் இருக்கும் சீமான், வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த  தகவலால் தொடர்ந்து “சீமானை கிருஷ்ணகிரி போலீசார் கண்காணித்து வருகின்றனர்” !

 

— மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.