ஃபுல் போதையில் குத்தாட்டம் போட்ட கோயில் அர்ச்சகர் ! வைரலான வீடியோ !
கோயில் அர்ச்சகர்களின் வைரல் குத்தாட்ட வீடியோ!
கோயில் கருவறையிலேயே கோவிலுக்கு வரும் பெண்களிடம் சல்லாபத்தில் ஈடுபட்டு கைதான அர்ச்சகர் தேவநாதனை தமிழகம் மறந்திருக்க வாய்ப்பில்லை. தேவநாதனை நினைவூட்டும் விதமாக, பக்தர்களாக அறிமுகமான பெண்ணிடம் பழகி கர்ப்பமாக்கிவிட்டார் என்ற சர்ச்சையில் சிக்கினார் ஆம்பூர் நாகநாதசுவாமி கோயில் தலைமை அர்ச்சகர் தியாகராஜன். சமஸ்கிருத மந்திரங்களை ஓதியும் உச்சரித்தும் கடவுளுக்கு ஆராதனை செய்ய வேண்டிய அர்ச்சகர், வாட்சப் சாட்டில் பல பெண்களுடன் காதல் ரசம் சொட்ட உரையாடிய சங்கதிகள் அம்பலத்துக்கு வந்தன.
இந்த பின்னணியில், அர்ச்சகர் தேவநாதன் வகையறாவில் மற்றொருவராய் இணைந்திருக்கிறார், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் குருக்கள் கோமதி விநாயகம்.
”ஆச்சாரம் நிறைந்தவர்கள், அமைதியானவர்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளுக்கும் கூட தீங்கு நேர்ந்துவிடக்கூடாதென்று வெங்காயத்தையும் பூண்டையும் அன்றாட உணவுப்பட்டியலிலிருந்து ஒதுக்கித் தள்ளுபவர்கள். ஊண் உண்ணாதவர்கள்.” என்றெல்லாம் இவர்களுக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் பாய்ச்சப்படுகிறது.
”அதெல்லாம் சும்மா தமாசு. நாங்களும் தர லோக்கலுதான். அடிமட்டத்துக்கும் போயி நாங்களும் அலசுவோம்ல”னு வடிவேலு பாணியில், தரமான சம்பவத்தை காட்டியிருக்கிறார் குருக்கள் கோமதி விநாயகம்.
ஃபுல் போதையில் இவரோடு சேர்ந்து மூன்று குருக்கள் குரூப் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற ஊரோரம் புளியமரம் பாடலுக்குத்தான் அந்த குத்தாட்டம். அதுவும், பிட்டத்தை தூக்கிக்காட்டி அவர்கள் ஆடிய ஆபாச நடனத்தை அங்கிருந்த மற்ற குருக்கள் வீடியோ எடுக்கிறார்கள்.
வழக்கமாகவே, மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாகத்தான் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில், இடுப்பில் கட்டிய துண்டையும் மேலே தூக்கிக் காட்டியபடி ஆடிய அந்த ஆபாச நடனம் பக்தர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த காணொளி குறித்து, சர்ச்சையில் சிக்கிய கோமதி விநாயகத்திடம் அங்குசம் சார்பில் பேசினோம். ”இந்த காணொளியில் இருப்பது நானும் என்னுடன் பணி புரியும் மற்ற குருக்களும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு அறையில் ஆடியது. வருகின்ற 29/06/2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நான் தலைமை ஏற்று கலந்து கொள்கிறேன். இதைப் பிடிக்காத இதற்கு முன்பு கோவிலில் பணியாற்றிய குருக்களின் மகன் சபரிநாதன் இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.” என்றார்.

இந்த விவகாரம் குறித்து, இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவாவிடம் பேசினோம். “இந்த வீடியோ வெளியாகி பார்த்தவுடன் நானும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த வீடியோவில் வரக்கூடியவர்கள் ஆன்மீகத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய காவியுடை, புனிதமான பூணூல் , திலகம் உள்ளிட்ட இந்து சமய அடையாளங்களை தரித்துக் கொண்டு இதுபோன்று வீடியோக்களை வெளியிடுவது மற்ற திருக்கோவில் பூசாரிகளையும் அய்யர்களையும் அவமதிக்கும் செயல். இதுபோன்ற நபர்களை திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்க கூடாது.
பெண்கள் குழந்தைகள் அனைவரும் வரக்கூடிய கோவில்களில் இது போன்ற நபர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திருக்கோவில்கள் பணிகளில் ஈடுபடுத்த தடை விதிக்கவும் அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.

காணொளி வெளியிட்டதாக சொல்லப்படும் சபரிநாதனிடம் விளக்கம் கேட்பதற்காக தொடர்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ, இரண்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றதா? இப்போது நடைபெற்றதா? என்பது நம் ஆய்வுக்குரியதல்ல. இந்த வீடியோவை யார் வெளியிட்டது? அவர்களுக்கு என்ன உள்நோக்கம்? என்பதும் நமக்கு அவசியமில்லாத ஒன்று. பெரியாரின் மொழியில் சொல்வதென்றால், கடவுள் இல்லை என்று தெரிந்த முதல் நாத்திகன் கோயில் அர்ச்சகர்கள்தான் என்ற வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாதபடி, உரிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும்; பெண் பக்தர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் !
சர்ச்சையில் சிக்கிய குருக்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆபாச நடன வீடியோவில் இடம்பெற்ற நால்வரும் கோவிலுக்குள் நுழைய அதிரடி தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது, விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் நிர்வாகம்.
– மாரீஸ்வரன்