ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி தொடங்கப்பட்ட TET தேர்வுக்கான விண்ணப்பம் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் TET – 1 ஆம் தாள் தேர்விற்கும், பட்டதாரி ஆசிரியர்கள் TET – 2 ஆம் தாள் தேர்விற்கும், விண்ணப்பித்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் TET தேர்விற்கான கால அவகாசம் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகின்ற நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதி நடைபெற இருக்கின்றன.
முழுமையான வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்
இத்தேர்விற்கு இடைநிலை ஆசிரியர்கள், M.Ed பட்டதாரி ஆசிரியர்கள், B.Ed இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பெருகின்ற இறுதியாண்டு மாணவர்கள் https:\\trb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 10 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.