அரை மணி நேரத்தில் ’நச்’சுன்னு முடிந்த ‘தடயம்’ நன்றி விழா!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜி-5-ல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ‘தடயம்’ என்ற வெப் சீரிஸ் ரிலீசானது. ரிலீசான ஐந்தே நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்ததால், ‘தடயம்’ வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா, மார்ச்.06-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
விழா மேடையில் தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா, ஜி-5 கெளசிக் நரசிம்மன், ஹீரோ சமுத்திரக்கனி, டைரக்டர் நவீன்குமார் பழனிவேல், அஜய் கிருஷ்ணாவின் தந்தையும் சீனியர் தயாரிப்பாளரும் சீரிஸில் அரசியல்வாதியாக நடித்தவருமான அழகன் தமிழ்மணி உட்பட படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மேடையில் அமர்ந்திருந்தாலும் அனைவரும் மிகவும் சுருக்கமாக பேசியதால், மாலை 4.45-க்கு தொடங்கிய விழா, 5.15-க்கு நச்சுன்னு முடிவடைந்தது.
கெளசிக் நரசிம்மன், “பொதுவாக வெப் சீரிஸ் ரிலீசாகி, சில வாரங்கள் கழித்துத் தான் மக்களின் முழு வரவேற்பையும் பார்க்க முடியும். ஆனால் இந்த ‘தடயம்’ ஐந்தே நாட்களில் 100 மில்லியன் நிமிடங்களை எட்டியிருப்பது சாதனை தான். இதற்கு மக்களின் பேராதரவு தான் காரணம். இதற்கு மீடியாக்கள் காரணம். எங்களின் நிறுவனத்திலிருந்து தொடர்ந்து நல்ல படைப்புகள் வரப்போகிறது”.
அஜய் கிருஷ்ணா,
“என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த கெளசிக் சாருக்கும் தைரியம் கொடுத்த சமுத்திரக்கனி அண்ணனுக்கும் பெரும் ஹிட்டாக்கிய மக்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி”.
டைரக்டர் நவீன்குமார் பழனிவேல்,
“இந்த வெற்றியின் முக்கிய காரணகர்த்தாக்களில் கெளசிக் சாரும் ஒருவர். எனக்கு வாய்ப்பளித்த அஜய்கிருஷ்ணா சார், சமுத்திரக்கனி அண்ணன் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி”.
அழகன் தமிழ்மணி,
“பத்திரிகை நண்பர்களுடன் தான் எனது சினிமா பயணம் தொடங்கியது. அப்போது தொடங்கிய நட்புப் பயணம் இப்போது வரை தொடர்வது மிகவும் மகிழ்ச்சி. அதே போல் எனது மகனை இந்த மேடையில் பார்ப்பதும் மகிழ்ச்சி. அவனுக்கும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி”.
“ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக் கொண்டே இருக்கும். இப்போது தடயம் அந்த நிறைவை மனசுக்குள் கொண்டு வந்து பல விசயங்களை சரி செய்த உணர்வைத் தருகிறது. சின்னத்திரையில் கிட்டத்தட்ட மூவாயிரம் எபிசோடுகளை டைரக்ட் பண்ணியிருக்கேன். ஆனால் அப்போது நேர்மையான பாராட்டுகளை கேட்பது அரிது. இப்போது பெரிய அங்கீகாரமும் பாராட்டும் இந்த தடயம் மூலம் கிடைத்திருப்பதற்கு அனைவருக்கும் நன்றி”.
— ஆண்டவர்










Comments are closed, but trackbacks and pingbacks are open.