தஞ்சை நகரின் அழகை சீர்குலைக்கும் பன்றிகள் !
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட இ.பி.காலனி, ஆரோக்கிய நகர், கல்யாண சுந்தரம் நகர், அஜீஸ் நகர், கருணாவதி நகர், ஜமால் உசேன் நகர், சத்யா நகர், காந்திஜி நகர், சுந்தரபுரம், செந்தமிழ் நகர், சுப்ரமணியபுரம், ஆசிரியர் காலனி, திருநகர்பார்வதி நகர், கெஜலெட்சுமி நகர் ஆகிய நகர்களுக்குள் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்; நாஞ்சிக்கோட்டை பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரியும் கடந்த டிசம்பர் – 05, வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை சாந்திப்பிரியா திருமண மண்டபம் எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புலவர் ஆதி.நெடுஞ்செழியன், அபிராமி பாஸ்கரன், கண்டிமுத்து, பாஸ்கர், சுந்தர் ராஜன், வாழ் அமர் கோட்டை இளங்கோவன், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் தமிழ்பல்கலை கழக காவல் ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் சபிதா தமிழ் அஞ்சலி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
— தஞ்சை க.நடராசன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.