தஞ்சாவூர் உழவர் சந்தையில் இயற்கை முறை சந்தை தொடக்கம்! விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் மகிழ்ச்சி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தஞ்சாவூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் உழவர் சந்தையில் இயற்கை முறை சந்தை துவக்க விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா விஜய் சரவணன் அவர்களால் ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கப்பட்டது. இந்த வார தோறும் நடைபெறும் சந்தையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய அரிசி வகைகள்,  தேன், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விவசாயிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இயற்கை சந்தை
இயற்கை சந்தை

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தஞ்சாவூர் உழவர் சந்தை 19 99 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கே  71 கடைகள் இயங்கி வருகிறது. இதில் பல்வேறுபட்ட காய்கறிகள் பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள இந்த உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பொருட்களை வாங்கி பயனடைகிறார்கள். இந்த சந்தை மிக சிறப்பாக இயங்கி வருகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக  இயற்கை சந்தை துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே ஜிபால் வேளாண் துறை இயக்குனர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் அவர்கள் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

இயற்கை சந்தைசட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில்  வருபவர்களால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படும்  சூழல் நிலவுவதாகவும் அதற்கு மாற்று வழியாக உழவர் சந்தைக்கு எதிரே உள்ள சிட்கோ இடத்தில் பார்க்கிங் ஏரியா ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக அந்த இடத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் மிக விரைவில் இந்த ஏற்பாடு செய்து தரப்படும் என்ற உறுதியளித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.