அங்குசம் பார்வையில் ‘தரைப்படை’   

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : “ஸ்டோன் எக்ஸ் பிக்சர்ஸ்’ பி.பி.வேல்முருகன். டைரக்‌ஷன் : ராம் பிரபா. நடிகர்-நடிகைகள் : பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஷாலினி, மோகனா, ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம், இசை : மனோஜ்குமார் பாபு, எடிட்டிங் : ராம்நாத், ஆர்ட் டைரக்டர் : ரவீந்திரன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ராஜன் ரீ, பி.ஆர்.ஓ. : நிதிஷ் ஸ்ரீராம்.

தரைப்படை திரைப்படம்அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசையைத் தூண்டி சீட்டுக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து ஆறு மாதம் கழித்து கம்பெனியை மூடிவிட்டு, மக்களுக்கு பட்டைநாமம் போடுகிறான் ஒருவன். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கமாகவும் வைரமாகவும் மாற்றி ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்து எஸ்கேப்பாக நினைக்கும் போது, ஒருவன் அவனை சுட்டுத் தள்ளிவிட்டு, ஆயிரம் கோடி ரூபாய் சூட்கேஸுடன் எஸ்ஸாகிறான்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

சுடப்பட்டவன் குத்துயிரும் குலைஉயிருமாக கிடக்க, அவனை இன்னொருவன் வந்து காப்பாற்றி சிகிச்சை கொடுக்கிறான். இந்த சூட்கேஸ் தகவல் இன்னொரு கேங்கிற்குத் தெரியவர, அதைக் கைப்பற்ற இன்னொருவனை அனுப்புகிறது அந்த கேங். அந்த சூட்கேஸைக் கைப்பற்ற நடக்கும் சண்டையே இந்த ‘தரைப்படை’ என்ற படம்.

தரைப்படை திரைப்படம்நம்மால் முடிந்தளவுக்கு கதையை சுவாரஸ்யமாக எழுதிவிட்டோம். ஆனால் படத்தப் பத்தியோ, படத்தின் காட்சிகளைப் பத்தியோ, எவ்வளவோ முயற்சி பண்ணியும் சுவாரஸ்யமாக எழுத முடியவில்லை. படம் அந்த லட்ணத்துல இருக்கு, நாம் என்ன செய்ய முடியும்/

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல்னு மூன்று ஹீரோக்கள். மூன்று பேருக்குமே மனசுக்குள்ள சூப்பர் ஸ்டார் ரஜினின்னு நினைப்பு போல. அதிலும் ஜீவா தங்கவேல்னு ஒருத்தர் இருக்காரே… பில்லா, பாட்ஷா, கபாலி ரஜினி மாடுலேஷன்ல டயலாக் பேசி நம்மள படுத்தி எடுக்குறான் மனுஷன்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

தரைப்படை திரைப்படம்நீ மட்டும் தான் ஆக்ட் கொடுப்பியா, நாங்க என்ன சொம்பையான்னு சவால்விடுற மாதிரி பிரஜினும் விஜய் விஷ்வாவும் படுத்துறபாடு இருக்கே… அத சொல்லவே நமக்கு நடுக்கமா இருக்கு. முதல் சீன்ல மட்டுமல்ல, மூணு பேரும் வர்ற எல்லா சீன்லயுமே பேக்ரவுண்ட் மியூசிக் எகிறியடிக்க, ஸ்லோமோஷன்ல பல வெரைட்டியான பெர்ஃபாமென்ஸ்களை வாரி இறைத்து, நமது பொறுமைய ரொம்பவே சோதிக்கிறார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மூணு பேருக்கும் மூணு ஹீரோயின்கள் வேற. அதிலும் விஜய்விஷ்வா சுடப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடக்கும் போது அவரின் வாயில் இருக்கும் சிகரெட்டைப் பத்தவைக்கிறாரே அந்த ஹீரோயின் [ பேரு ஷாலின்னு நினைக்கிறோம்]  அடேங்கப்பா… டைரக்டர் ராம்பிரபா… நீ எங்கேயோ போய்ட்டப்பா.

ஹீரோக்கள், ஹீரோயின்கள் லட்சணமே இப்படின்னா, வில்லன்களைப் பத்தி தனியா வேற எழுதி உங்களை இம்சைப்படுத்த  நாங்க விரும்பல.

நன்றி வணக்கம் மக்களே…

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.