அங்குசம் சேனலில் இணைய

பூஜையுடன் ஆரம்பமானது ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வி. வி .எஸ். சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. எம்.வி.ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் முக்கியமான மூன்று முதன்மை கதாபாத்திரங்களில் ‘முருகா’ அசோக் குமார், ‘மரகதக்காடு’   அஜய்  மற்றும் ஒருவர் என மூவர் நடிக்கின்றனர்.. கதாநாயகியாக சோனியா நடிக்க லொள்ளுசபா மாறன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

'சதுரங்க ஆட்டம் ஆரம்பம்'இப்படத்தின் பூஜை பிரசாத் 70 எம் .எம்  ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ்,, நடிகர் சக்தி குமார், லொள்ளு சபா மாறன், இயக்குநர் பாரதி கணேஷ், நடிகர் ரோபோ கணேஷ், விநியோகஸ்தர் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பூஜை நிகழ்வில் பேசியவர்கள்…..

தயாரிப்பாளர் வினோத் வி சர்மா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“திரைப்படம் என்பது வெறும் கதை அல்ல. அது உணர்ச்சிகளின் சங்கமம். கனவுகளின் வெளிப்பாடு. மற்றும் பலரின் உழைப்பின் சாட்சி. எங்கள் படக்குழுவினரின் திறமை, ஆற்றல், உழைப்பு இந்த படத்திற்கு மெருகூட்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள்  உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பேன் என நம்புகிறேன்”.

'சதுரங்க ஆட்டம் ஆரம்பம்'இயக்குனர் எம்.வி.ராமச்சந்திரன்

“இந்தப்  படத்தை இயக்குவதற்கு, வாய்ப்பு கொடுத்த என்று சொல்ல முடியாது.. வாழ்க்கையே கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய 24 வருட போராட்டம், பல இழப்புகளுக்கு பிறகு தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இயக்குநராக வேண்டும் என என் அம்மா உள்ளிட்ட பலர் விரும்பினார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிச்சயமாக இந்தப் படத்தின் மூலம் அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுவேன். புராண காலத்தில் சதுரங்கம் வேறு மாதிரி இருந்தது. காலப்போக்கில் இப்போது வேறு மாதிரி மாறிவிட்டது. இதை வைத்து வித்தியாசமான ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன். இதற்கு எனது குருநாதர் இயக்குனர் பாரதி கணேஷ் ரொம்பவே உறுதுணையாக இருந்தார். நிறைய உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்தக்  கதையை உருவாக்கி இருக்கிறேன்”.

தொழில் நுட்பக்குழு

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தயாரிப்பு:   வி.  வி. எஸ். சுப்ரீம் பிலிம்ஸ் வினோத் வி. சர்மா

இணைத் தயாரிப்பு: இந்தியன் ஜிம்கலி & PVR புருசோத் பாண்டியன்

ஒளிப்பதிவு: டேனியல். ஜே வில்லியம்ஸ்

இசை: பாலசுப்ரமணியம். ஜி

எடிட்டிங்:ராம் சுதர்சன்

பாடல்கள்: மதுரகவி, பொத்துவில் அஸ்வின், கானா சமீலு, கவி மகேஷ்

நடனம்: பாபா பாஸ்கர்

உடையலங்காரம்: V. மூர்த்தி

ஒப்பனை: ராஜூ

மக்கள் தொடர்பு: A.ஜான்

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.