நாடு முழுவதும் நூறு நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு நெருக்கடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக தமிழகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஒன்றிய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி கொடுப்பதில்லை” – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கருப்பூர், கடலையூர், எட்டயபுரம், கீழ ஈரால் உள்ளிட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு  நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

அப்போது அவர் பேசுகையில் , “‘தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு முதலீடுகளை பயணம் மூலமாக பெற்று வந்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை உருவாக்கி தந்து கொண்டிருக்கிறார்கள்.  காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என  ஒவ்வொருவருக்கும் எது தேவை என்பதை நாம் சொல்வதற்கு முன்பாகவே  அந்தத் திட்டங்களை உருவாக்கி தந்து கொண்டிருக்கக் கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு  தமிழகத்திற்கான  நிதியை தருவதில்லை. நம்மிடம் வாங்கும் வரிப்பணத்தில் இருந்து நிதி தர வேண்டும் அதை தருவதில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலையும், ஊதியமும் சரியாக வரவில்லை. ஏனென்றால் அது ஒன்றிய அரசின் திட்டம். பிரதமர்  நரேந்திர மோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு  நிதி  கொடுப்பதில்லை.

இண்டியா கூட்டணி ஆட்சி வந்திருந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூபாய் நானூறு ஊதியமாக வழங்குவோம் என்று உறுதி அளித்திருந்தோம் . ஆனால் ஆட்சி மாற்றம் வரவில்லை .100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியை பிரதமர்  நரேந்திர  மோடி குறைத்துக் கொண்டே வருகிறார்.

தமிழக மட்டுமல்ல இந்தியா முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சரியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் மக்களின் உரிமைகளுக்காக தமிழகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க கூடிய முதல்வர் நம்முடைய மு.க. ஸ்டாலின். தொடர்ந்து மக்கள் அவருக்கு உறுதுணையாக ஆதரவு  அளிக்க  வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

—  மணிபாரதி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.