விவசாயி நாட்டின் மகுடம் – தஞ்சை ஹேமலதா.

0

வாய்க்கால் வெட்டி

சிலை செதுக்குவது போல்

அழகாய் வரப்பு வெட்டி

உழைப்பின் பசி கூப்பாடு

சும்மாடு சுமந்த சாப்பாடு

 

கடன் வாங்கி நாத்து நட்டு

பூச்சி வந்து முகாமிட்டு

இயற்கை உரம் மறந்து

செயற்கை உரம் கொட்டி

கால் வலியில்

வரப்பில் நடந்து

பயிராகும் காலம் வரை

பணத்தை தேடும்

தொடா் காலம் வரை

 

வரப்பில்

பூவரச மரம்

பந்தல் போட்ட மாதிரி

தென்றல் தாலாட்டும் காற்று

குருவிகளின் ராகம்

பயத்தங்கா கொடிகளின்

மணி மணியாய் காய்கள்

கோவக்காய் பழங்களாய்

பறவைகள்

கொத்தி தின்னும்

அழகு

 

உழவன் உலகத்தின்

முன்னோடி

அவன்தான் உழைப்பின்

கண்ணாடி

நாட்டின் செழுமை

அவன் கையில்

உழைத்து பார்த்தால்

ஒன்றுமில்லை அவன் பையில்

 

அம்மா களை எடுக்க

அப்பா மருந்து தெளிக்க

குடும்பமே

உழைக்கும் வயற்காடு

எல்லாமே

ஒரு சான் வயிற்றுப்பாடு

 

அன்று

ராமனின் கையில்

வில்

இன்று

உழவனின் உடம்பே

வில்

 

திருமணம் குறிச்சாச்சு

பத்திரிக்கை

அடிச்சாச்சு

பெண்ணின் சீர் வரிசை

எண்ணிக்கை

நெல்

மூட்டையில்

இருக்குதப்பா

 

வியா்வையின்

வாசம்

உழவனை பேசும்

விவசாயி

நாட்டின்

மகுடம்

— தஞ்சை ஹேமலதா.

Leave A Reply

Your email address will not be published.