கஞ்சா போதை இளைஞர்கள்… தட்டிக் கேட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி !
கஞ்சா போதை இளைஞர்கள்… தட்டிக் கேட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி !
கம்பம் அருகே கே.கே பட்டி அரசு பள்ளி முன்பு கஞ்சா மற்றும் மது போதையில் தகராறு செய்து வரும் இருவர் குறித்து புகார் தெரிவித்த நான்காம் ஆண்டு சட்ட கல்லூரி படிக்கும் மாணவி மீது தாக்குதல்.
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாதிடம், ராயப்பன்பட்டி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே கே.கே பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு படித்து வரும் கீதா ரூபிணி.
இவர் கம்பம் அருகே உள்ள கேகே பெட்டி அரசு பள்ளி முன்பு தினந்தோறும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மது போதை மற்றும் கஞ்சா போதையில் தகராறு செய்து வரும் நபர்கள் மீது ராயப்பன்பட்டி காவல்துறையினர் புகார் தெரிவித்தார்.
புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தார்.
காவல்துறையினர் சட்டக் கல்லூரி மாணவி புகாரை தொடர்ந்து எச்சரிக்கை செய்த காரணத்தால் கல்லூரி முடிந்து சென்ற மாணவியை தகாத வார்த்தைகளில் பேசி தகராறு செய்தனர்.
பின்னர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த நபர் வீட்டிற்கு மாணவியின் பாட்டி சென்று எதற்கு எனது பேத்தியிடம் தகராறு செய்கிறீர்கள் என கேட்டபோது சட்டக் கல்லூரி மாணவியை கடுமையாக தலையில் வாலியை வைத்து தாக்கினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் படுகாயம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவி கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தகராறு செய்த ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதை ஊசிகளின் புழக்கம் தாராளம் உள்ளது குறித்து புகார் தெரிவித்த நான்காம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாதிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
— ஜெய்ஸ்ரீராம்.