மதுரை – ஆயுதபடை மைதானத்தில் போலீசார் குறை தீர்க்கும் முகாம் !
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ……பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுக்க தீவிரமாக நாம் கண்காணிக்க வேண்டும் மதுரையில் டிஜி பி.சங்கர் ஜிவால் போலீசாருக்கு கட்டளை…
மதுரை ஆயுதபடை மைதானத்தில் நடைபெற்ற போலீசார் குறைதீர் முகாமில் டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்தார். பிறகு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு குற்றத் தடுப்புகள் தொடர்பாக டிஜிபி ஆய்வு நடத்தினார்.
இதில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த், விருதுநகர் எஸ்பி கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ‘சட்டம் ஒழுங்கு குற்றத்தடுப்பு மதுவிலக்கு பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்கள் நீதிமன்ற விசாரணை வழக்குகள் குற்றத்தரிப்பு குறித்து ஆவணங்களை ஆய்வு செய்தார்.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் சைபர் குற்றங்கள் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கட்டளை இட்டார். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய் பொறி காவல்துறை அதிகாரி என்றும் ஆலோசனை நடத்தினார். ஆயுதபடை மைதானத்தில் போலீசாரின் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் பெண் போலீஸாரிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட சங்கர் ஜிவால் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த பணிக்கான பாராட்டுச் சான்றிதழ்களை போலீசாருக்கு வழங்கினார். இதையடுத்து அந்த வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
— ஷாகுல், படங்கள்:ஆனந்தன்.