அதிமுகவின் எதிர்காலம் – நீர்மேல் எழுதிய கோலமா ? வீடியோ பதிவு !

0

அதிமுகவின் எதிர்காலம் சவால்களைச் சந்தித்துச் சாதிக்குமா? திமுகவிலிருந்து எம்.ஜி.இராமச்சந்திரன் நீக்கப்பட்ட பின்பு அவர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். இந்திராகாந்தியின் நெருக்கடி கால நிலையின் போது, மாநிலக் கட்சிகளைத் தடை செய்வார் என்ற ஒரு தகவல் பொதுவெளியில் பரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். தன் கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திமுக என்று மாற்றி வைத்தார். அதைச் சுருக்கமாக அஇஅதிமுக என்றாலும் பொதுவாக அதிமுக என்றே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகின்றது.

MGR_
MGR_

https://businesstrichy.com/the-royal-mahal/

எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய சில மாதங்களில் திண்டுக்கல்லுக்கு நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக 3ஆவது இடத்தையே பெற்றிருந்தது. தொடர்ந்து 1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல் அமைச்சரானார். பின்னர் 1980 மற்றும் 1984 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தொடர் வெற்றியைப் பெற்றது.

(ஜானகி அணி) அதிமுக (ஜெயலலிதா அணி)
(ஜானகி அணி) அதிமுக (ஜெயலலிதா அணி)

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து அதிமுக (ஜானகி அணி) அதிமுக (ஜெயலலிதா அணி) என்று பிரிந்து 1989ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும், இரு அணிகளும் அதிமுக என்ற பெயரில் இணைந்தன. 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார். 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.

வீடியோ பதிவு  

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்தார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது என்றாலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அதிமுக எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டமன்றத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்தது. ஜெயலலிதா காலத்தில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்துள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப்பின் கட்சியை வழிநடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இவர் காலத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதைப்போலவே தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு இடம்கூட வெல்லவில்லை. சுமார் 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 10 தொகுதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 2ஆவது இடம் பிடிக்க 11 இடங்களில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்றம்/சட்டமன்ற இடைத்தேர்தலிலும், புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சிக்குப் பின் 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட ஒரு இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதிமுகவின் எதிர்காலம் பாஜகவின் வளர்ச்சியால் திசைமாறிக் கொண்டிருக்கின்றது.

ஜெயலலிதாவுடன் - எடப்பாடி பழனிச்சாமி
ஜெயலலிதாவுடன் – எடப்பாடி பழனிச்சாமி

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக திமுகவைவிட 6 வாக்குகளே குறைவாகப் பெற்றிருந்தது. நடந்து முடிந்த விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 10 ஆயிரம் மட்டுமே. அதிமுக தேர்தலைப் புறக்கணித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,“திமுக இந்தத் தேர்தலில் ஈரோடு இடைத்தேர்தல்போல் தில்லுமுல்லுகளைச் செய்யும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும். தேர்தலை முறையாக நடத்தாது என்பதால் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கின்றது” என்று கூறப்பட்டிருந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்தக் காரணம் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாக இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலை நடத்துவது இந்தியத் தேர்தல் ஆணையம். திமுக தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றது என்றால் பாஜகவின் கண்ணசைவில் செயல்பாடும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்கும்? பழனிசாமி இந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தால் தன் தலைமைக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியே தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

விக்ரவாண்டி தேர்தல்
விக்ரவாண்டி தேர்தல்

இன்னொரு பார்வையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து, பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு வாக்குகளை அதிகரிக்கவும் வெற்றி வாய்ப்பையும் தந்துள்ளது என்ற பார்வையும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். ஒருவேளை இந்தத் தேர்தலில் பாமக வெற்றி பெற்றால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக – பாஜக கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் திமுக பெற்ற வாக்குகளை நெருங்கி விடுகின்றது. வேறுபாடு என்பது 3% அளவில்தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உருவானால் திமுகவுக்கு அது நெருக்கடியான அமையும் என்றும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பும் ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலை - எடப்பாடி
அண்ணாமலை – எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியோ 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார். அப்படியானால் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று எண்ணலாம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளோடு சுமார் 10 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. “எங்களிடம் 2.5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்” என்று பெருமையோடு சொல்லும் அதிமுக நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து 1 கோடி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அப்படியானால் அதிமுகவின் வாக்கு வங்கியினைப் பாஜக தன்வயப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக இதை உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்வி குறித்துப் பேசும்போது,“அதிமுக இந்தத் தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கின்றது” என்று சொல்லிவிட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளைச் சந்திக்காமல் சென்றுவிட்டார். அதிமுக 21% – 24% வாக்குகளை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இழந்துள்ளது என்ற உண்மையை அதிமுக உணர்ந்து செயல்பட்டால் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

உண்மையை உணராமல் அதிமுக தொண்டர் மகிழ்ச்சியடையும் வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அம்மா ஆட்சி அமையும் என்று வாக்குறுதி அளிப்பது என்பது நீர்மேல் எழுதிய கோலமாக உள்ளது. அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் எழுச்சி பெறுகின்ற வகையில் அதிமுக தன் தேர்தல் உத்தியை வகுக்கவேண்டும். அதிமுகவை மாவட்டம் வாரியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைவர்கள் உள்ளனர்.

அதிமுகவின் எதிர்காலம் மக்கள் கைகளில் இல்லை. தொண்டர்களின் கைகளிலும் இல்லை. அதிமுக வகுக்கும் தேர்தல் வியூகங்களின் அடிப்படையில் தேர்தல்களில் பெறும் வெற்றியை வைத்தே அதிமுகவின் எதிர்காலம் கணிக்கப்படும். அதிமுக தனித்து வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே. திமுக மீது வைக்கும் கடுமையான விமர்சனங்களைப் பாஜக மீதும் வைத்து மெகா கூட்டணி அமைத்தால் ஒருவேளை ஆட்சிக் கனவு பலிக்கலாம். அதிமுக தலைவர்கள் எப்படிச் செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

-ஆதவன்

 வீடியோ பதிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.